Friday, August 10, 2012

உபதேசம்


சொல்வதிலகு செய்வதிலகல்ல என்ற
கருத்தைச் செய்து காட்டும் உன்மத்தர்
இங்கு இருந்தென்ன போயென்ன

ஊருக்குபதேசித் துள்வீட்டைப் பூட்டிவைக்கும்
உப்பற்ற உபதேசிகள் இங்கு உயிர்
வாழ்ந்தென்ன  வீழ்ந்தென்ன

வாழு வாழவிடு செய்யிலை செத்திடெனும்
போலி வார்த்தை பேசும் பதர்கள்
பல்பிடுங்கீரோ நாப்பிடுங்காரோ

சும்மாயிரது போதும் என்றுணர்ந்த மாந்தர்
எம்மாம் பெரிதாய்ப் போதிப்பார் இவர்
வாழ வாழ்த்தும் உபதேசமே
செயபால், ஆக. 10, 2012