Saturday, January 31, 2015

பறை முழக்கமும் வேட்கையும்

அண்மையில் ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு செய்திக் கட்டுரையை வாசித்தபோது மிக வியப்பாக இருந்தது. சமுதாய உத்வேகம் கொண்ட மனிதர்கள் எத்தனை கோணங்களில் இருந்து, எப்படி எல்லாம் முட்டி மோதுகிறார்கள் என்பது  சிந்திக்க வைத்தது.  இக் கட்டுரையில் வரும் நபர்களின் பெயர்கள் சிலிர்க்க வைக்கின்றன. மணிமாறன், சமரன், மகிழினி, இனியன் ....
புனை பெயரோ என்று சந்தேகப்படவும் வைக்கிறது. தமிழிற் தோய்த்தெடுத்த பெயர்கள். வாழ்த்துகள்.

இவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கையில், இவை போல், சமுதாயத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்காக இயக்கங்களும், கட்சிகளும் ஆரம்பித்து உழைக்கும் தியாகச் செம்மல்களை வியந்து பார்த்த காலங்களும் நினைவுத் திரையில் வருகின்றன.

சாதிப் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுகிறார்களே, பிரிவுகளை  வரையறுத்து அவற்றைப் புதுப்பித்து அவற்றைக் காலத்தோடு அழிய விடாமல் வாழ வைப்பதற்கு ஒரு ஊடகமாகச் செயற்படுகிறார்களே என்று எதிர்க் கருத்துக்கள் கூட எழுந்தன. இருந்தும் அந்த இயக்கங்களால், கட்சிகளால், சில ஒடுக்கப்பட்ட மக்கள் பல வாய்ப்புக்களைப் பெற்று முன்னிலைக்கு வந்ததும் கண்கூடே நடந்தும் இருக்கின்றன. அதன் பக்க விளைவாக விளைந்த சோகம்-துரோகம்-தோல்வி என்றும் ஒன்று எரிவதை மறுக்க முடியுமா?

கட்சியாலோ, இயக்கத்தாலோ முன்னிலைக்கு வந்து விட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களுடன் கைகோர்த்துச் சவுரிமைச் சமுதாயம் உருவாகலுக்கு தடைக்கல்லாக அல்ல மலையாக முளைத்தார்கள். கலப்புத் திருமணங்களை எதிர்த்தார்கள். அப்படிச் செய்தவர்களை எரித்தார்கள், செய்ய எண்ணியிருந்தவர்களைப் பயமுறுத்தினார்கள்.
எப்படிப்பட்ட தலைவர்கள் இவர்கள்?
எப்படித் தீரும் அடிமைத் தளை, வர்க்க பேதம்?
எப்படி மலரும் சமத்துவம்?

இப்படிப்பட்டவர்களின் செயற்களைப் பார்க்கும் போது, ஒரு பிரபல ஆன்மீகவாதியொருவரின் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வருகிறது.

ஆன்மீகி: The Indian communities in London and San Francisco are trying to become -you know the word? Sahib?
பேட்டி எடுப்பவர்: [Laughs] Westernized. [They both laugh] A very great social anthropologist at the university has written something very interesting. He says there are two processes- the process of Westernization among brahmanas, mainly the upper class, and the process called Sanskritization, which is the process of adopting brahmana rituals, etc., by the so called lower classes, even untouchables. It is very interesting process in India just now. But, India's position, unfortunately, is problematic.
ஆன்மீகி: The difficulty is that India is nowhere. They are trying to imitate Western life, but from a materialistic or technical point of view, they are one hundred years back.


இதனைப் புரிந்து கொண்டு பார்த்தால், உண்மையில், சாதி இயக்கங்களும் கட்சிகளும் வர்க்க பேதங்களைக் களைய முயலவில்லை. மாறாக அந்தச் சாதீயப் படியில் மேலேறி வரவே முயன்றிருக்கிறார்கள் என்பது புரியும். சில படிகள் மேலே வந்தவுடன், தமக்குங் கீழே சில படிகளில் இன்னுஞ் சிலர் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தவுடன், ஒரு குரூர புத்தியால் அவர்களை மிதிக்க வேண்டும் என்றும் துணிகிறார்கள்.

இப்படியானவர்களிலிருந்து மக்களை மீட்டு, நல்ல நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், கல்வியறிவு, அடிப்படை மனிதவுரிமை பற்றிய கல்வி ஒடுக்குபவர்களுக்கும், ஒடுக்கப்படுபவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
பள்ளியில் படித்த நல்லொழுக்கங்களில் விதிவிலக்குகள் உண்டென்று வீடுகளிற் புகட்டும் பெரியவர்கள் அதை நிறுத்திப் பொறுப்புடன் வாழ வேண்டும்.

சரி, இவ்வளவு எழுத வைத்து விட்ட காடுரை இதோ.

நன்றி - ஆனந்தவிகடன் 2012