Tuesday, December 13, 2011

பாடகர்கள் ஜெயச்சந்திரன் - மது பாலகிருஸ்ணன்

1. மலரோ நிலவோ மலை மகளோ
2. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு



3. மஞ்சள் நிலாவுக்கு
4. ஆடி வெள்ளி தேடி வந்து
5. எங்கெங்கும் அவள் முகம்
6. சித்திரச் செவ்வானம் சிவக்கக் கண்டேன்
7. தவிக்குது தயங்குது ஒரு மனது
8. ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்



போன்ற பல சிறந்த பாடல்களைப் பாடிய ஒரு அதிசயப் பாடகர் ஜெயச்சந்திரன். யேசுதாசிடம் இல்லாத ஒரு கவர்ச்சி அவர் குரலில் உண்டு. மெல்லிய சோகம் இழையோடும் பாடல்களை இவர் பாடும் போது அந்தப் பாடல்கள் பெரும் புகழடைந்திருந்தன.

இப்பொழுதெல்லாம் இவர் பாடல்கள் வருவதில்லை, வயதாகி விட்டது. இப்படிப்பட்ட பாடகருக்குப் பிறகு யார் வருவார் என்று ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடம் தீர்ந்த்து போல் ஒரு உணர்வு இந்தப் பாடலைக் கேட்டால் வரும். அந்தப் பாடல்,அபியும் நானும் படத்தில் உயிரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடல்

வா வா என் தேவதையே - பொன்
வாய் பேசும் தாரகையே



படம் பார்க்கும் போது இது ஜெயச்சந்திரனின் இன்னொரு சிறந்த பாடல் என்று எண்ணிக் கொண்டிருந்தவேளை அதைப் பாடியவர் மது பாலகிருஸ்ணன் என்று அறிந்த போது அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டென்று நம்ப வைத்தது.

ஜெயச்சந்திரன் ரசிகர்களுக்காக இங்கே சில பாடல்கள்
http://mp3.tamilwire.com/p-jayachandran.html

4 comments:

வவ்வால் said...

good collections of jayachandran. good post.

எஸ் சக்திவேல் said...

ஜெயச்சந்திரன் எனக்கும் பிடித்த பாடகர்.

எனது பதிவு கீழே.

http://www.ssakthivel.com/2011/12/underestimated.html

Jeyapalan said...

நன்றி சக்திவேல். உங்கள் பதிவும் பார்த்தேன். என்னைப் போலவே உங்கள் ரசனையும். SPB, KJJ பல பாடல்களைத் திறமையாகப் பாடியிருந்தாலும், TMS போல் வராது.

Jeyapalan said...

நன்றி வவ்வால், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.