Sunday, June 03, 2018

யார் நீ


யார் நீ


முப்பொழுதும் எப்பொழுதும்
உன் நினைப்பே ஆனாலும்
நீ எந்தன் காதலல்ல

முன் நினைப்பும் பின் நினைப்பும்
உன் நினைப்பே ஆனாலும்
நீ எந்தன் உறவுமல்ல

இத்துணையாய் எப்பொழுதும்
ஆக்கிரமிக் கும்நீ
நான் தேடும் இறையுமல்ல

இப்படியாய்த் துலங்கும் நீ
கடன் வாங்கித் தராதொழிக்கும்
கடன்காரத் தாரகையே

No comments: