ஐ - என்ற படம் வந்து நாளாகி விட்டது. அதனால் இதைப் பற்றி எழுதுவதனால் வசூல் பாதிக்கப்படாது என் மேல் யாரும் கோபப்பட மாட்டார்கள் என்றும் எண்ணி இப்போது சில வார்த்தைகள் கீழே.
என்ன நல்லவை இருக்கின்றன?
1. விக்ரம் மற்றும் நடிகர்கள்
2. ஆணழகர்களையும் ஆணழகர் போட்டியையும் வெளிக் கொணர்ந்தது
3. சீனக் காட்சிகள்
4. பவர் சுடர் (ஸ்டார்)
5. இயக்கம், ஒளிப்பதிவு, இசை
என்னை ஏமாற்றியவை:
என்ன நல்லவை இருக்கின்றன?
1. விக்ரம் மற்றும் நடிகர்கள்
2. ஆணழகர்களையும் ஆணழகர் போட்டியையும் வெளிக் கொணர்ந்தது
3. சீனக் காட்சிகள்
4. பவர் சுடர் (ஸ்டார்)
5. இயக்கம், ஒளிப்பதிவு, இசை
என்னை ஏமாற்றியவை:
- ஐ என்ற தமிழில் அரிதாக பயன்படுத்தப்படும் சொல்லைக் கொண்டு வந்து அறிமுகம் செய்கிறார் என்ற எதிபார்ப்புப் புண்பட்டது. ஐ என்றால் தலைவன், உயரியவன் என்ற பெரும் பொருள் வெளியில் வரவில்லை. இது போல் பெயர்களில் விளையாடுவது சங்கருக்கு வாடிக்கையானது தான். ஜீன்ஸ், சிவாஜி போன்றவை.
- அதற்குத் தந்த விளக்கம் மோசம். ஐ என்பது Influenza என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தாம், சரி. ஆங்கிலத்தைத் தமிழில் எழுதியிருக்கிறார். (வரி விலக்குக் கிடைத்ததா?) பொதுவாக, அந்த ஐ வைரசால் வருவது ஒரு வகைத் தடிமன், காய்ச்சல், இருமல். மேலை நாடுகளில், குளிர் காலத்தில் ஒரு இயல்பான நிகழ்வு, Flu என்று சுருக்கமாகச் சொல்வார்கள். அதற்குத் தடுப்பு மருந்து போடுவதும், மக்களின் வாடிக்கையான விசயம். இந்த ஐ விக்ரமை அப்படி விகாரமாக்கு மென்பது, வைரமுத்துவின் அதிகப் பிரசங்கித் தனமான சில கவிதைகள் போன்றது.
- ஆணழகர்ப் போட்டியில் நடைபெறும் சண்டை - அர்த்தமற்றது, தப்பெண்ணக் கருவை வெளியிடுகிறது.
- எமி - பெரிதாகப் பொருந்தவில்லை. (என்று தணியும் இந்த வெள்ளை, அரை வெள்ளை மோகம்?)
- ”சப்பை எடுடா வண்டியை” - இது போல் ஒரு வசனம். மிக இழிவான வார்த்தைப் பிரயோகம். இந்தியனின் மதிப்பைக் கெடுக்கும் ஒரு தவறு. ஆங்கில மொழி பெயர்ப்புச் செய்தவர் அதை என்ன செய்தார் என்று கவனிக்கவில்லை. பொறுப்புடன் கூடிய கவனம் தேவை.
- அந்த அழகுபடுத்தும் கலைஞரை, அவரின் பலவீனத்தைக் கொண்டு நையாண்டுவது, இன்னொரு இழி நிலை. அப்படி நையாண்டி செய்வது தவறு என்று எங்காவது ஒரு இடத்தில் காட்டியிருக்கலாம். சமுதாயப் பொறுப்புள்ள இயக்குனர் கொஞ்சம் பிறழ்வது தெரிகிறது.
- கடைசிச் சண்டைகள் அர்த்தமற்றவை, அலுப்படிக்கின்றன.
- சங்கர் படமென்று போனேன், சங்கர் ஒரு படி இறங்கியிருக்கிறார்.