Wednesday, June 22, 2016
Sunday, June 12, 2016
பாரதியார் சில துளிகள்
பாரதி வாழ்வு
இற்றைக்கு
நூற்றிமுப்பது
ஆண்டுகள்
முன்பு
எட்டயபுரத்தில்
பிறந்திருந்தான்
ஏறு போலொருவன்
இயற்பெயராய்
அவனுக்கிட்டார்
சுப்பிரமணியன்
தமிழ்ப்புலமை
கண்டு அரசினிட்டான்
பாரதியென்று
இள வயதிற் புகழடைந்த
பாரதிகண்டு
மனம் புழுங்கி மிகவே
எரிந்திருந்தான்
காந்திமதிநாதன்
மட்டந்
தட்டப் போட்டிக்குக்
கூவியழைத்தான்
ஈற் றடிகொடுத்து
வெண்பாவொன்று
பாடச் சொன்னான்
பாரதியைப்
பாடச் சொன்னான்.
ஈற்றடியாய்க்
காந்திமதி
நாதன் கொடுத்தான்
பாரதிசின்னப்
பயலென்று
முடிக்கச்
சொன்னான்
வெண்பாவை
முடிக்கச்சொன்னான்
காரது எனப் பாரதியும்
தொடங்கிப் பாடியே
போட்டிவைத்த
காந்திமதி நாதனையே
அதி சின்னப்பயலென்று
மடக்கி
வைத்தான் - அன்று
மடக்கிவைத்தான்
பொதுநிகழ்வில்
பங்கேற்றார்
பாரதி ஒருநாள்- அங்கே
வந்த வெள்ளை மாதொருத்தி
கேள்வி
தொடுத்தாள்
நிகழ்ச்சிக்குன்
மனைவியிங்கு
ஏன் வரவில்லை - உன்
வலது கைய விட்டு விட்டு
நீ வரலாமா? - என்ற
கேள்வியினால்
ஞானம் பெற்ற அன்றிலிருந்தே
பெண் விடுதலையைத் தீவிரமாய்
உரக்கவே
சொன்னான்
சமத்துவமே
மகத்துவமெனப்
போற்றி
வாழ்ந்தான்
பின்பற்றி
வாழ்ந்தான்
ஏற்றத் தாழ்வு போற்றுவோரைச்
சாடிப்
பாடினான் - அதை
நீக்கப்பாடினான்
அதற்கொரு
பதமாய்
வெள்ளை
நிறத்தொரு பூனை
பறவை மிருகம் மரங்கள் நிறங்கள்
அழகை வியந்தான் - அவை
பேணிக்
காக்க வேண்டி நின்று
பாடியே
வைத்தான் - பாரதி
பாடியதே
இந்தச்
சின்னங்சிறு
குருவி போலே
தன் திறமை தன்
நிலைமை
நன்கறிந்த
பாரதி
நயமாகப்
பாடிவைத்தான்
நல்லதோர்
வீணை
பன்மொழியில்
அவர்க்கிருந்த
புலமையினாலே
- அவை
அனைத்திலுமே
சிறந்ததெங்கள்
தமிழ்மொழியென்று
பாரறியப்
புகழ்ந்து நிற்கும்
பாவது
யாமறிந்த
எனத்தொடங்கும்
பாவது
பாரதியின்
பாடல்களைச்
சமகாலத்தில்
பலவிடத்தில்
பாடிவந்தார்
பாடகர்
ஒருவர்
அறிந்திராத
பாரதியின்
பழக்கம்
கிடைத்ததும் - தன்
பெயரைக்
கூட
மாற்றி
விட்டார்
சுப்புரத்தினம்
- கனக
சுப்புரத்தினம்
தாசன் என்றே தனை அழைத்த
அந்த இரத்தினம் - பாரதி
தாசன் என்று புகழ்பூத்த
புரட்சிக்கவிஞன்
ஆதி அந்தம் இல்லாத
தமிழ் மொழி தன்னை
மறைந்து
போகக் கூடுமென்று
சொன்ன மூடரை
பேதை என்று அறைந்து
வடித்த
கவிதை தன்னை
பொருள்
விளங்கா
மக்கள்
சிலர்
பொய்ப்
பரப்புச்
செய்வதனை
விழிப்புணர்வோ
டிடித்த்திடுவீர்
முப்பத்தெட்டாம்
வயதினிலே
விபத்து
நடந்ததே - ஒரு
விபத்து
நடந்ததே
யானை ஒன்று பாரதியை
தாக்கி
வீழ்த்தியே -கொஞ்சம்
காயப்படுத்தவே
அதிலிருந்து
தேறி வந்தார்
ஆர்வமாகப்
பணிகள் செய்தார்
காலமதைக் காலால்
உதைக்கும்
துணிவு மிக்கவர் -அவர்
துணிவு
மிக்கவர்
யானை தாக்கி மாளவில்லை
அறிஞன்
பாரதி
வேறு நோயுற்றுக்
காலமானான்
கவிஞன்
பாரதி
அகிலம்
போற்றும் நல்ல கவி
தமிழ்மொழிக்குப்
புதிய ஒளி
விடிவு
வேண்டி வேட்கை கொண்ட
வீரக் கவி சாய்ந்ததுவே
வீழ்ந்த
வயதென்னவோ
வெறும்
முப்பத்து
ஒன்பதே
------- ஒரு பாடசாலை நிகழ்ச்சிக்காக எழுதியது, சில மாற்றங்களுடன், இங்கே.
Subscribe to:
Posts (Atom)