Monday, October 09, 2006

விஜய் வளர்கிறாரா?

நடிகர் விஜயின் வளர்ச்சிக்குச் சில வரிகள்.

அண்மைக் காலங்களில் நடிகர் விஜயின் படங்களை எல்லோரும் விரும்பிப் பார்க்குமளவிற்கு மக்கள் மத்தியில் அவை பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. குழந்தைகள் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக விஜயின் படங்களும் அவரது பாத்திரங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வயதுக் குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பும் ஒரு நடிகராக அவர் வளர்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே. நல்ல திசையில் அவரது தொழில்விருத்தி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கவனிக்க வேண்டிய ஒரு மிக முக்கிய விடயமும் உள்ளது.

அண்மையில் அவரது ஆதி, பகவதி, சிவகாசி, மதுர போன்ற படங்களை பார்க்க நேர்ந்தது. படங்களில் அவர் வழக்கம் போலவே நல்ல மனிதனாக வந்து நல்லது செய்கிறார். பாடல்கள், நடனம் என்று குழந்தைகள் விரும்பும் அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் அவர் ஒரு மகா தவறைத் தனக்கும் தெரியாமல் இப் படங்களில் செய்திருப்பது குழந்தைகளின் செயல் மூலம் அவதானிக்கப்படக் கூடியதாக இருந்தது. குழந்தைகள் சண்டைக் காட்சிகளை ரசிக்கிறார்கள். ஆனால் மேற் சொன்ன படங்களில் இருப்பவை, சண்டைக் காட்சிகள் அல்ல கொலைக் காட்சிகள். அவற்றைக் காணக் குழந்தைகள் கிலி கொள்கிறார்கள், வெறுக்கிறார்கள், ஓடி ஒளிக்கிறார்கள். அவ்வளவுக்குப் பயங்கரமான காட்சிகள் அந்தச் சண்டைகள். குழந்தைகளின் அபிமான நடிகர் குழந்தைகளின் மனோ நிலையைப் புரிந்து சண்டை காட்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். வேறு பல படங்களிலும் மகா பயங்கரமான கொலைக் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால், அந்தப் படங்களின் நடிகர்கள் விஜய் போல் குழந்தைகளின் அபிமானம் பெற்றவர்களல்ல. சூர்யா சமீப காலமாக அந்த இடத்தை நெருங்கி வருகிறார், அவரும் இந்தக் கொலைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்தக் குலை நடுங்க வைக்கும் கொலைப் பயங்கரங்களை விஜய் தன் படங்களில் இருந்து நீக்கா விட்டால் அவர் ஒரு ரசிகர் பட்டாளத்தை மிக மலிவாக இழக்கப் போகிறார். இன்றைய குழந்தைகள் தான் அவரை நாளை உச்ச நடிகர் என்ற தானத்திற்கு ஏற்றி வைக்கப் போகிறவர்கள் என்பதை விஜய் கருத்திற் கொண்டு தன் படங்களையும் காட்சிகளையும் தெரிவு செய்ய வேண்டும். காசாசையில், தயாரிப்பளர்களும், இயக்குனர்களும் எப்படிப் பட்ட கதைகளையும் காட்சிகளையும் கொண்டு வருவார்கள். அதைத் தணிக்கை செய்ய வேண்டியது முன்னணிக் கதாநாயகனின் பொறுப்பு. வளரும் நாயகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதோடு மட்டுமில்லாமல், குழந்தைகள் பார்க்கக் கூடிய படங்களும் வர வேண்டும் என்ற அற்ப ஆசையில் ஒரு எழுத்து.

7 comments:

buginsoup said...

அப்படிபோடு அரிவாள!
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு எழுதீட்டீங்க தலைவா!

ஆமா விஜய் கொலைபதிவு, சாரி, வலைபதிவு எல்லாம் படிப்பவரா?

Anonymous said...

First, before starting to say anything, let me tell you onething - vijay might have grown as a star power but he has not even started (neither shows any signs!) of growing as an actor!! He never comes across as a honest guy in anything he says od does! Initially he teamed up with his father and mother and made all those "family" movies(like rasigan!!?!)which guys like you might have enjoyed a lot and became fans! Actors like him are totally screwing up tamil cinema from any chance of growth! All they want is to get a hit to hike their price for their next movie!! (That's why he is so obsessed with Telugu/Malayalm hit movies.
Words fail me in expressing the bad taste that I am left with after watching his movies like Thirupachchi/ Sivakasi etc.,! Add to that, those unfogivable "kuththu" songs which I hate and can't stand them at all!

I do not know what's wrong with our moive watching public in general! People like you should watch a movie based on it's gender. If somebody makes a movie about a serial killer, why do you want kids to watch it? If all the time you want movies to be seen with the whole family, then directors should make movies from "Ambulimaama" only!! There won't be any variety at all! BTW, I will be glad if kids shy away from watching Vijay's (or for that matter most of this wannabe future "Chief Ministers" of tamil cinema!) stupid, crass, worthless movies! They are better of playing out in the muddy field outside thei home!

கார்த்திக் பிரபு said...

vijay oru nall nadikar enbadhaiye inum opu kolla mudiya villai ennal..tamil cinemavai verum poludhu pokiragag than pugal parpum oodagamagavey avr use pannkitukar..avar male madhip varamataengirdhu

Jeyapalan said...

buginsoup,
//ஆமா விஜய் கொலைபதிவு, சாரி, வலைபதிவு எல்லாம் படிப்பவரா? //
யார் கண்டா? படிக்காவிட்டாலும், கேள்விப்பட்டால் சரி.
நன்றி சூப்.

Jeyapalan said...

அனானி, கார்த்திக்,

நடப்பில் அவர் படங்களுக்கு எதிபார்ப்புக் கொஞ்சம் இருக்கு. அது நீடிக்குமா இல்லையா என்பது தெரியாது. ஆனால், அவர் தன் பெயரைக் கெடுக்காமலிருக்க இந்தக் கொலைச் சமரை நீக்க வேண்டுமென்பதே என் அவா. மொத்தமான திரை அலசல் வெறொரு பதிவில் பார்க்கலாம்.
வரவுக்கும் கருத்தைப் பதித்ததற்கும் நன்றிகள்.

தமிழில் அடிக்க குறைந்த பட்சம் சுடச்சுட ஈழமெழுதி உண்டே.
ஈழமெழுதி

பொன்ஸ்~~Poorna said...

விஜய் நல்ல நடிகர் என்று இந்தப் பதிவு நிருபிக்க முயலவில்லை என்றே தோன்றுகிறது. விஜயின் நடிப்பைப் பற்றி விவாதிக்குமுன் இன்றைய சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார்களின் நடிப்புத் திறனைப் பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது.

மற்றபடி, குழந்தைகள் என்ற ரசிகர் வட்டத்தை விஜய் இழக்கிறார் என்னும் உங்கள் ஆதங்கம் புரியும் போதே, ஆதி, சிவகாசி போன்ற படங்களில் பெண்களின் செய்கைகளை விமர்சிக்கும் அவரது வசனங்களால், ரசிகையர் வட்டத்தையும் விஜய் இழக்கிறார்/இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இதையும் அவர் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

Jeyapalan said...

பொன்ஸ்.
சரியாக விளங்கியிருக்கிறீர்கள். அவரின் திறமை பற்றி நான் எழுதவில்லை. அவருக்கு இருக்கும் தற்போதைய ஆதரவையும் அதை அவர் இழக்க நேரிடும் சூழ்நிலையயும் மட்டுமே குறிப்பிடுகிறேன்.

வரவுக்கும், கருத்துக் கூறியதற்கும் நன்றி.