Wednesday, May 17, 2006

2006 - விசாகம் (வெசாக்) படு கொலைப் பரிசு

புத்தர் பெருமான் சகலதும் பெற்ற நாளைக் கொண்டாடு முகமாகச் சிங்களப் பெளத்தர்களிடமிருந்து ஈழத் தமிழருக்குக் கிடைத்த வைகாசி விசாகத் திருநாட் பரிசு.

இந்தச் சுட்டியில் இருப்பது அகிலக் கவியின் கவிதை!

என் அழுகை கீழே!!
==================

ஈரற் குலை நடுங்குதையா
ஈனக் கொலை நடக்குதையா
ஈழநல் நாட்டி லெம்
இரத்தம் ஆறாய் ஓடுதையா

இன்றில்லையேல் இன்னொருநாள் - நீ
நின்று பதில் சொல்லிடுவாய்
பண்பு கெட்ட படு கொலைகாரா
பலிக் காதுன் கொலைத் தந்திரம்

அல்லைப் பிட்டியில் ஆறு பேர்
அம் பாறையில் ஐந்து பேர்
அதிலடங்கும் பிஞ்சுகள் பெயர்
அழுதுமுடியுமோ எம் துயர்

கொன்று குவிக்கும் சிங்கள நாடே
இன்றிதைப் பார்த்தும் பாரா விடுத்து
மென்று விழுங்கும் உலகத்தோரே
கன்றைக் கூடக் கொல்லும் கூட்டம்
என்றைக் குத்தான் திருந்தும் ஐயா


-ஜெயபால்

2 comments:

வெற்றி said...

ஜெயபால்,
நெஞ்சை உருக்கும் கவிதை.
கொல்லாமையைப் போதித்த புத்தபிரான் மீண்டும் அவதரித்து வந்தாலும் இக் கொலை வெறியர்களைத் திருத்த முடியுமா என்பது சந்தேகமே!

Jeyapalan said...

பாராட்டுக்கு நன்றி வெற்றி.