Wednesday, December 12, 2012

பூக்கள் பூக்கும் தருணம்


பூக்கள் பூக்கும் தருணம்

மதராசப்பட்டினம் படத்தில் இடம் பெறும் இந்தப் பாடலைப் பல முறை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும் போதும், புதிதாகக் கேட்பது போலவே இருக்கும். இப் பாடலின் இனிமைக்குக் காரணமாக பாடல் வரிகள், பாடலின் இசை, பாடியவர்களின் குரல் என்பவை முழுப் பங்கையும் ஆற்றியிருக்கின்றன. இவற்றில் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் இவை ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றன.

இந்தப் பாடல் ஒரு உயிரோட்டமான பாடல் என்று சொன்னால் மிகையாகாது. பாடல் முழுக்கப் பல வகை இசைக்கருவிகள் மிக நேர்த்தியாக நெறிப்படுத்தப்பட்டு மிக அடக்கமான அசாத்திய இனிமையை பிழிந்து சாறாகத் தருவதில் இசையமைப்பாளர் வெற்றி கண்டிருக்கிறார். பாடல் முழுக்க ஆட்சி செலுத்தும் புல்லாங்குழலின்  இனிமை, பெரும் இனிமை. இப் படத்தில் வரும் அத்தனை பாடல்களுமே இனிமை தான். ஆனால் பூக்கள் பூக்கும் தருணம், இனிமையில்  ஒரு படி கூட இருக்கிறது.

ஆடுகளம், வெயில் உட்படப்  பல படங்களுக்கு நல்ல இசையைத் திறம்பட அமைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார், நிச்சயமாக,  இப்போது இருப்பதை விட இன்னும் பெரிய இசையமைப்பாளராக பெரும் புகழடைவார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் பாடல் இடம்பெற்ற படம், பல துறைகளுக்குச் சிறந்த விருதுகளைப் பெற்றிருக்க வேண்டிய படம். அந்த வேளையில், ஆடுகளம் பல விருதுகளைப் பெற்ற போது, மதராசப்பட்டினம் படத்துக்கு என்ன நடந்தது என்று எம்மைத் திகைக்க வத்த ஒரு சிறந்த படம். அதிட்டம் இருக்கவில்லைப் போலும்.

பாடலைக் கேட்க விரும்பினால் இங்கே பாருங்கள்.


No comments: