கடை பிடிக்க
வேண்டும்
கடைப்பிடிக்க
வேண்டியதைக்
கடை பிடிக்க
வேண்டுமென்று
கடை பிடித்துத்
தமிழழிவைக்
கூவி விற்பார்
சிலரிங்கு
முறையாகத் தமிழ்
கற்றுச்
சொற்புணர்ச்சி
அறிந்துகொண்டு
இலக்கணமாய்
எழுதிவர
இயலவில்லைச்
சிலருக்கு
சாகாதோ தமிழென்று
கொலை வெறியோடொரு
கூட்டம்
காத்திருக்கும்
வேளையிலே
அவருக்குக்
கைகொடுத்துக்
களமிறங்கிப்
பணியாற்றும்
கோடாலிக் காம்புகளின்
கோலமதைப் பாருங்கள்
ஊக்கிகள்:
கட்டி போட்டாயா
கேள்வி பட்டு
கடைபிடித்து
அடைப்பட்டு
No comments:
Post a Comment