Tuesday, August 25, 2015

திரைப் படப் பாடல்களின் காப்புரிமம்

திரைப் படப் பாடல்களின் காப்புரிமை பற்றிய சர்ச்சைகளும் தடைகளும் நாளாந்தம் நாம் பார்க்கும் ஒரு நிகழ்வாகி விட்டது. 20, 30  ஆண்டுகளுக்கு முன்னர் இக் காப்புரிமைகள் பற்றி யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. எல்லாமே வியாபார யுகமாகி விட்ட இக் காலத்தில் இது ஒரு பெரும் பாடாகி விட்டது.
அண்மையில் கூட ஒரு இசையமைப்பாளர் காப்புரிமை தொடர்பாக ஒரு வழக்கில் மேன் முறையீடு செய்து, தான் இசையமைத்திருந்த பாடல்களுக்குக்  காப்புரிமை பெற்றுக் கொண்டதைச் செய்தியாகக் கேள்விப்பட்டோம்.
பாடல்களுக்குக்  காப்புரிமை என்ற பூட்டைப் போட்டுப் பூட்டுவதால் நல்ல இசை இலகுவில் மக்களைச்  சென்றடைவது கட்டுப்படுத்தப் படுகிறது. பூட்டி வைத்த பொக்கிசமாக யாருக்கும் பயன்படாது போவது எவ்வளவு அநியாயம். சிதம்பரத்தில் மாட்டிக் கொண்ட திருமுறைகள் போல் ஒரு நிலை உருவாகுமே.
நாட்டுப் பாடல்களையும் நாடோடிப் பாடல்களையும் யாராவது காப்புரிமை செய்து  வைத்திருந்து இருந்தால் நாம் இப்போது இரசிக்கும் பல பாடல்கள் உருவாகியிருக்க மாட்டாது.
திரைப் படப் பாடல்களை எடுத்துக் கொண்டால், அது யாருக்கு உண்மையில் சொந்தம்?
திரைப் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் படத்திற்கான முழுச் செலவையும் பார்த்துக் கொள்கிறார். படத்தில் இடம் பெறும் எல்லா வேலைகளுக்கும் சம்பளம் கொடுத்தே அத்தனை விளைவுகளும் பெற்றுக் கொள்ளப் படுகின்றன. ஆகவே, கதை, வசனம், பாடல்கள், உட்படத் திரைப்படம் முழுவதுமே தயாரிப்பாளருக்குச் சொந்தம்.  பாடல்களில் கூட பலரின் பங்களிப்பு  உண்டல்லவா? பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர்கள் இசைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் போன்ற பலரின் பங்களிப்பில் உருவாவது தான் பாடல்கள். மேற் சொன்ன பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் அவரவர்க்கான கூலி வழங்கப் பட்டாகி விட்டது.  அதனால் பாடலின் உரிமையை இசையமைப்பாளர் ஒருவர் கோருவது சரியல்ல.
மேலும், படம் எடுக்கப்பட்ட பின்னர், அது வெளியாகி ஓடும் போது, பொது மக்கள் அதற்கு அனுமதிச் சீட்டைக் காசு கொடுத்துப் பெற்றுப்  பார்க்கிறார்கள். இதன்படி பார்த்தால் வெளியிடப்பட்ட பின்னர் ஒரு திரைப் படம் பொது மக்களுக்கே சொந்தம். அதாவது அது ஒரு பொதுச் சொத்து. அந்தப் பொதுச் சொத்திலிருக்கும் பாடல்களை தனியொருவரோ அல்லது ஒரு கம்பனியோ உரிமைப் பதிவு செய்து தடைகளை  விதிப்பது முறையல்ல.
 

Saturday, May 16, 2015

மறவோமே

மறவோமே


நிற்க நடக்க
நிம்மதியா படுத்துறங்கப்
பாந்தமாய் வாழ்ந்த நம்
பத்திரப் பூமி அது
பாட்டன் வழிச் சொத்தெனக்
கொண்டாடும் வீடது

மனிதனாய் வாழ்ந்து
நிம்மதியா மூச்சு விட்டு
நினைத்ததை வெளியாக
உரிமையோ டுரைத்திட்டு
திரிந்த நம் தேசம்
சிக்கித் தவித்தது
பலவந்தப் படுத்தும்
பலரின் கைகளிலே

அத்தனை ஆக்கிரமிப்பும்
அப்பப்ப முறியடித்துக்
காத்திரமாய் வாழ்ந்து வந்தோம்
எம் தாயின் மடியில் நாமே

மீண்டுமொரு அத்துமீறல்
வந்ததேயிந் நாளினிலே
அக்கிரமம் நிறைசூழ்க்
கடுந்துயர்க் காலமிதில்

சொந்த நாட்டு மக்களையே
சொத்தையென்று பிரித்தெடுத்து
தாண்டவமாடத்
தலைப்பட்ட தோரரசு

எதிரிக்கு நாம் பேசும்
மொழி முதலிற் பிடிக்கவில்லை
உதவிக்கு நாம் அழைக்கும்
கடவுளையும் பிடிக்கவில்லை
சமமாக வாழ வைக்க
மனதில் இடம் இருக்கவில்லை
மனித உரிமைகளை
மதித்து அவர் நடக்கவில்லை

தமிழன் தன் திறமையாற்
தலையெடுத்தால் பிடிக்கவில்லை
தரணிபுகழ் தமிழர்தம்
பண்பாடும் பிடிக்கவில்லை
தமிழனென்றோர் அடையாளம்
இருப்பதே பிடிக்கவில்லை
பூர்வீகக் குடிகளது
பூர்வீகம் பிடிக்கவில்லை
பூர்வீகம் பொய்யென்று
பொய்யுரைக்கக் கசக்கவில்லை

மதவெறி மொழிவெறி
மதம் பிடித்துக் கூவி நின்றார்
தமிழ்மக்கள் உரிமைகளை
பலங் கொண்டு மிதித்திட்டார்

அழித்து விட்டால் ஆருங் கேளார்
என்ற வழி தெரிந்திட்டார்
அந்தவழி செல்வதற்கு
அடித்தளமும் போட்டு விட்டார்
அங்கு கேட்டு இங்கு கேட்டு
ஆதரவும் பெற்றிட்டார்
அழிக்கும் படலத்தைப்
படிப்படியாய் தொடங்கிட்டார்

மக்கள் வாழ்விடங்கள் எல்லாம்
கடகடவெனத் தகர்த்திட்டார்
வீழ்ந்து பட்ட மாந்தர்க்கு
மருந்துகூட மறுத்திட்டார்

மந்தைகளாய் மக்களையே
முள்ளிவாய்க்கல் துரத்திட்டார்
பட்டிக்குள் ஆடுகளாய்
முட்டுக்குள் அடைத்திட்டார்

குந்தக் கூட இடமின்றி
நெருக்குப்பட்டு நின்றவரை
கொத்தாய்க் குதறிடவே
மூர்க்கமாய்த் துணிந்திட்டார்

ஏதிலியாய் நின்றவரின்
இறுதி நிலை உணர்ந்திட்ட
ஈர நெஞ்சம் படைத்தவர்கள்
ஓடி வந்து காக்க வரக்
கோரிக்கை வைத்த போது
கோர முக எதிரியவன்
கொலை வெறியோ டெதிர்த்திட்டான்

கொத்துக் கொத்தாய்ச் சாய்த்து விட்டான்
கொட்டும் கொடும் ஆயுதத்தால்
கொஞ்ச நேரப் பொழுதினிலே
கொலையுண்டோர் கொஞ்சமல்ல

குழந்தைகளா பெண்களா
குடுகுடு கிழங்களா
கொல்லடா கூண்டோடென்று
கூவிக் கூவிக் கொன்றொழித்தார்

மாண்டவர் மாண்டு விழ
மீதிருந்தோர் துவண்டு விழ
மான பங்கப் படுத்திட்டார்
அதைப் பார்த்து மகிழ்ந்திட்டார்

முள்ளிவாய்க்காற் கொடுந்துயரம்
முட்டிமோதிக் கலங்க வைக்க
கடுந்துயரக் கொலைகள் எம்மைக்
கனவிற்கூடக் கதற வைக்க
ஆறாண்டு போனபின்னும்
அவரை நினைத் தரற்றுகின்றோம்
ஆறென்ன அறுபதென்ன
ஆயிர மாண்டானாலும்
அவர் துன்பம் மறவோமே

கோரத் தாண்டவத்தில்
மாண்டுவிட்ட எம் உறவை
ஊழிக் காலங்கள்
மீண்டுமீண்டு வந்தாலும்
மறவோமே மறவோமே
இன்னொருவர்க் கித்துயரம்
இனிவரஅனு மதியோமே

Wednesday, May 06, 2015

புலம் பெயர்ந்தோர் மொழி இருப்பு

புலம் பெயர்ந்தோர் மொழி இருப்பு


ஒளி இருப்பு விளங்க அது
பட வேண்டும் பொருள் மீது
பட்ட ஒளி விழ வேண்டும் 
பார்க்கும் கண் கள்மீது

பார்த்தவர் மதி சொல்லும்
பார்த்தது எது என்று
முழு மதியால் உணர்வோமே 
தெரிய வைத்தது ஒளி என்று

ஒளியைப் போல் மொழி துலங்கப்
பேசிப் படித்து எழுதிக் காட்ட
மக்கள் வேண்டும் ஊடகமாய்
காவிச் செல்லக் காவிகளாய்

புலம் பெயர்ந்து வந்தவர்கள்
புலன் இழந்து வீழவில்லை
வந்த இடம் புதிது என்று
வாய் பொத்தி நிற்கவில்லை

புகுந்த நாட்டு மொழியினிலே
புலமை நிலை நிறுத்திவிடு
அத்தோடு தேர்ச்சி பெறு
தமிழ் மொழியில் விரைவாக

இரண்டு மொழி மூன்று மொழி
இளமையிலே கற்ப தெளிது
மானிடரின் மதித் திறனில்
பல மொழிகள் புகுமிலகில்

மொழியார்வம் மிகுந்து விட்டால்
எமையாரும் மிதித்து விடார்
வெறி பிடித்துப் பிதற்றாமல்
வடிவாக வேலை செய்வோம்

நாம் வழங்கா நமது மொழி
நாளைக்கே மறந்துவிடும்
நாள் தோறும் புழங்கினாலோ
நம்மில் நிலை பெற்றுவிடும்

தமிழில் உரை யாடிடுவோம்
தமிழில் உற வாடிடுவோம்
தமிழ் தடக்குப் பட்டு நின்றால்
தெரிந்து கொள்ள முயன்றிடுவோம்

கணினித் தமிழ் யுகத்தினிலே
நமக் கெல்லாம் வலையில் விழும்
தேடிப் பார்க்கக் கூகிள் உண்டு
பகிர்ந்து பேச முகநூல் உண்டு

இத்தனை வாய்ப்பிருந்தும்
வரவில்லைத் தமிழென்றால்
குற்றமது யார் மேலே
குற்றமது யார் மேலே

வீண்புலம்பல் தனை விடுத்து
வீராப்பாய்த் துடித் தெழுந்து
பேசிடுவோம் படித்திடுவோம்
எழுதிடுவோம் நம் தமிழை

நாம் வளர்க்கத் தமிழ் ஒன்றும்
மரமும் அல்ல மகவும் அல்ல
வளர்ந்து நிற்கும் தமிழை நாம்
தினம் புழங்க அது நிலைக்கும்

தமிழ் வாழும் தமிழ் வாழும்
கோடி நூல்கள் கண்ட மொழி
எம்மில் தமிழ் தினம் இணைக்க
தலை நிமிர்ந்து தமிழ் வாழும்


ஒரு ஆண்டு மலருக்காக 2015 இல் எழுதியது

Saturday, April 11, 2015

அறிவிப்பாளர்களின் எதிர்காலம் - ?

சொற்களை வாசிக்கும் செயலிகள் (apps) வந்து எதையும் வாசித்துக் காட்டும் கருவியாகி விட்டதால், வாசிக்கும் வேலையோ அல்லது வாசிக்கும் நுணுக்கமோ ஒரு சாதரணப் பொதுமகனுக்கு இனித் தேவையில்லாத ஒன்றாகப் போகிறது. பார்வைக் குறைபாடுடையவர்கள் இனி வாசிக்கச் சிரமப்படத் தேவையில்லை. ஒலிப்பதைக் கேட்கக் காது இருந்தால் இப்போது போதும். எதிர்காலத்தில், காதும் தேவையில்லை என்ற கட்டம் வரலாம்.

வாகனங்களில் வழி காட்டியாகத் திகழும் GPS எனப்படும் கருவி எங்களை வழி சொல்லி நெறிப்படுத்துகிறது. வீதிப் பெயர்களை வாசித்துச் சொல்கிறது.

வாசிப்புச் செயலிகள் எல்லாம் பழைய படங்களில் வரும் இயந்திர மனிதர் போல் கடின நடையில் பேசுவதில்லை. இயல்பாகவே வாசிக்கின்றன. இப்படியான வாசிப்புச் செயலிகளைக் கொஞ்சம் மெருகுபடுத்தி விட்டால், அழகாக எல்லாவற்றையும் வாசிக்கும். நாமும் இனிய குரல்களில் புத்தகங்கள் ”கேட்கலாம்” (வாசிக்கலாம்).

இப்படியே எமது வானொலி, தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாகப் பணி புரிபவர்களையும் இந்தச் செயலிகள் (இயந்திரங்கள்) அகற்றிவிடும். இதனால் நல்ல பயன் என்னவென்றால், சில தொகுப்பாளர்களின் அலப்பல்களிலிருந்து எமக்கு விடிவு கிடைக்கும். ஆக மொத்தத்தில் தொகுப்பாளர்களின் தொழில்  நாட்கள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு செயலி:
https://play.google.com/store/apps/details?id=com.google.android.tts&hl=en

Thursday, March 05, 2015

தமிழ் எழுத்துக்கள் முந்நூற்றுப் பதின்மூன்றா அல்லது முப்பதா? - பகுதி - 4

உயிரெழுத்துக்கள்

, , , , என்பவை ஒரு மாத்திரை அளவு உச்சரிப்புக் காலத்தைக் கொண்டவை. இவை தவிர்ந்த மற்ற உயிரெழுத்துக்கள் இந்த ஐந்தினதும் நீண்ட ஒலியுடையவையே. அதாவது கால மாத்திரை நீட்டப்பட்டவை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
அத்துடன், ஆகியவை தனி உயிரெழுத்துகள் என்று கொள்ளாமல் அவற்றை அய்என்றும் அவ்என்றும் கொள்ளலாம்.
அப்போ, , , , , ஆகிய எழுத்துக்களை மாற்று வழியில் கொணர்வோம். இதற்காக சில ஒலி அழுத்தக் குறிகளை அறிமுகம் செய்து இவற்றை உருவாக்கும் வழியை பார்ப்போம்.

:

இதுஇற்கு மேலே ஒரு கிடைக் கோடு போடுவது.

இதே போலவே எல்லா குறுகிய ஓசையுள்ள உயிரெழுத்துக்களின் மேலே கோடு போட்டு எழுதுவதன் மூலம் நீண்ட ஓசை உடைய உயிர் எழுத்துக்களை எழுதலாம்.     

     இவ்வாறாக நீண்ட ஓசை எழுத்துக்களுக்கு ஒலி அழுத்தக் குறிகளை உபயோகிப்பதன் மூலம் பல உயிர் மெய்யெழுத்துக்களையும் எழுதும் முறை இலகுவாக்கப்படப் போகின்றன.

எளிய அரிச்சுவடி


உயிரெழுத்துக்கள் 12 என எம் இலக்கண நூல்கள் சொல்கையில், நாம் இனிவரப் போகும் அடிப்படை உயிரெழுத்துக்களை, உயிர்ச் சுவடிகள் என அழைப்போம். அவ்வாறே அகர மெய்யெழுத்துக்களை அடிப்படை எழுத்துக்களாகக் கொண்டு வரும் மெய் வடிவங்களை அறிமுகம் செய்து அவற்றை மெய்ச் சுவடிகள் என அழைப்போம். இவற்றோடு பயன்பாட்டுக்கு எடுக்கும் ஒலியழுத்தக் குறிகளை அழுத்தச் சுவடிகள் எனவும் அழைப்போம்.
இப்பொழுது எளிதாக்கப் பட்ட அரிச்சுவடி 30 கட்டங்களில் சுவடிகளைக் கொண்ட ஒரு அட்டவணையே.        
 க - வை உதாரணமாகக் கொண்டு இந்த எழுத்துக்களை அடையாளம் காண்போம்.

இப்பொழுது நம் அரிச்சுவடி 24 எழுத்துக்களுடனும் 6 ஒலிக் குறிப்புக்களுடனும்  இலகுவான ஒரு அரிச்சுவடியாக வந்து விட்டது.
இத்தோடு, கிரந்த எழுத்துக்களுக்கும், மேலதிக சேர்க்கைத் தேவைகளுக்குமாக சில அதிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை பின்னர் ஒரு முறை பார்க்கலாம்.

சுருங்கிய எளிதான தமிழ் அரிச்சுவடி இதோ 


நன்றி 

தமிழ் எழுத்துக்கள் முந்நூற்றுப் பதின்மூன்றா அல்லது முப்பதா? - பகுதி - 3

எழுத்து எண்ணிக்கைக் குழப்பம் தவிர்த்தல்

முதலில் 247 அல்லது 313 எழுத்துக்கள் கொண்ட தமிழ் அரிச்சுவடி என்ற மிரட்டல் அறிமுகத்தை அகற்ற ஒரு வழி காண்போம்அதாவது பழைய நூல்களில் வரையறுக்கப்பட்டுள்ளது போல் தமிழ் எழுத்துக்கள் முப்பதும் ஆய்தமும் ஆக 31 என்றே ஆரம்பிப்போம்.

உயிர்மெய் எழுத்துக்கள் என்பவை மெய்யுடன் உயிர் சேர்ந்து பிறப்பவை.
அதாவது:       க் + = கொ                  ட் + = டி
இப்படி உருவாகும் எழுத்துக்களுக்குப் புதுப் புது வடிவங்கள் கொடுக்கப்பட்டு இருந்தமையால் அவற்றிற்கு எனத் தனியான எழுத்துக்களை வைத்து நம் அரிச்சுவடியைப் பருக்க வைத்துக் காண்பிக்க நேர்கிறது. உயிர்மெய் எழுத்துக்களின் சீரற்ற உருவாக்கல் முறை அவற்றை அட்டவணைப் படுத்திக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்த்து அவற்றின் உருவாக்கலை எளிதாக்க முடிந்தால் பெரிய தனி அட்டவணையைத் தவிர்க்க இயலும்.

தற்போது உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கலில், உகரம் மற்றும் ஊகாரம் தவிர்ந்த மற்றைய எழுத்துக்கள் இலகுவில் அறிமுகப்படுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன. இருந்தும்,  ஒகரம், ஓகாரம் போன்ற எழுத்துக்களுக்கு, முன்னும் பின்னும் குறிகளாகக்  கொம்பையும் காலையும் சேர்க்கும் முறையை எளிதாக்கலாம். இவற்றைக் கருத்திற் கொண்டு  ஒலி அழுத்தக் குறிகள் என்ற சில குறிகளை ஒருசீராக, முறையாக அறிமுகப்படுத்தி உயிர்மெய் எழுத்துகளை ஒரு எளிதான சீரான சேர்க்கை மூலம் எழுத  வேண்டும்.

ஒலி அழுத்தக் குறிகள்

உலகின் பல மொழிகளில் ஒலி அழுத்தக் குறிகள் உபயோகத்திலிருக்கின்றன. இவற்றைத் தனியாக எழுத்துக்கள் என்று அறிமுகப்படுத்துவதோ அல்லது எண்ணுவதோ இல்லை. அவை வெறும் ஒலிச் சேர்க்கைகள். தமிழின் மெய்யெழுத்துக்கள் கூட இப்படியான ஒரு குற்று அல்லது புள்ளி என்ற ஒலிக்குறிப்போடு கூடிய ஒரு எழுத்தேஆக  ’இற்குக் குற்றுப் போட்டால்க்’. இது போலவே உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கலை நாம் குறைந்தபட்ச சீரான ஒலியழுத்தக் குறிகளுடன் உருவாக்கத் தேவையான ஒலியழுத்தக் குறிகளை உட்கொணர்வோம்.
இப்படி ஒலியழுத்தக் குறிகள் மூலமாக அரிச்சுவடியின் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் போது, நமது அரிச்சுவடி இலகுவடையும்.
ஒலி அழுத்தக் குறி 1. குற்று அல்லது புள்ளி
இகர உயிர்மெய்க்கு தற்போதிருக்கும் விசிறியே ஒலியழுத்தக் குறி.
இகர உயிர்மெய் –  ⃞+வலது பக்க மேல் நுனியில் விசிறி இடுதல்
ஒலி அழுத்தக் குறி 2. விசிறி
உகர உயிர்மெய் வெவ்வேறு மெய்களுக்கு வெவ்வேறு தோற்றத்தில் தற்போது காணப்படுகின்றன. இதற்காக எல்லா மெய்களின் மேற் பொருந்தக் கூடியதாக ஒரு பொதுவான ஒலியழுத்தக் குறியைஅறிமுகப்படுத்த வேண்டும்
சில வட எழுத்துக்களிற் காணப்படும் உகரம் (ஸு) பயன்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அது சில எழுத்தின் வடிவை விகாரப் படுத்துவது போல் உள்ளது. எடுத்துக் காட்டாக , , , போன்றவை. அதனால் புதிய இலகுவான ஒரு ஒலியழுத்தக் குறியாக ஒரு நிலைக் கோடு ஒன்றை அறிமுகம் செய்யலாம்.

உகர உயிர்மெய்⃞+ -  மெய்யின் வலப் பக்கத்தில் ஒரு நிலைக் கோடு

 ஒலி அழுத்தக் குறி 3. வலப் பக்கத்தில் ஒரு நிலைக் கோடு


எகர உயிர்மெய்க்கு தற்போதிருக்கும் ஒற்றைக் கொம்பு ஒலியழுத்தக் குறி.
எகர உயிர்மெய்⃞+ - மெய்யின் இடப் பக்கத்தில் ஒற்றைக் கொம்பு
ஒலி அழுத்தக் குறி 4. கொம்பு 

ஒகர உயிர்மெய்க்குவைப் போலிருக்கும் ஒரு குறியை அறிமுகம் செய்வது நன்று. அதாவது இரட்டைக் கொம்பை 90 பாகையால் வலப்பக்கச் சுழற்சி செய்தால் வரும் எழுத்து இதற்குப் பொருத்தமாக இருக்கும். இதனை மெய்யின் இடப்பக்கத்தில் இட்டு ஒலியழுத்தக் குறியென ஏற்போம்.


ஒகர உயிர்மெய் - ⃞+ - இடப் பக்கத்தில் சரிந்த இரட்டைக் கொம்பு (”போல) -

ஒலி அழுத்தக் குறி 4. ஒகரம் 


இவ்வாறாக இருப்பவையும் புதியவையும் கீழ்க் காணும் அட்டவணையில் தரப்படலாம்.

இதுவரை நாம் பார்த்தது குறுகிய ஒலி வடிவ மெய்யெழுத்துக்களையே. நீண்ட ஒலியுடைய எழுத்துக்களைப் பற்றி இன்னும் சற்று விரிவாக நோக்க இருப்பதால் அவற்றை இனி வரப் போகும் விளக்கங்களுக்குப் பிறகு காண்போம்.