Wednesday, September 10, 2014

ஆன்ட்றொயிட் இல் தமிழ் எழுதிப் பகிர ஒரு செயலி

ஆண்ட்றொயிட்  வகை ஸ்மார்ட் கைப் பேசியில் தமிழில் எழுத ஒரு பிரயோகம் ஒன்று தயார். இந்த வகைக் கைபேசிகள் வைத்திருப்போர் தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.



An app to type in Tamil for Android smart phones is available. You can try downloading and installing to make use of it and enjoy typing Tamil.

download here

Full address: http://www.amazon.com/dp/B00NCD8TYG/ref=cm_sw_r_tw_dp_Evleub0R3PYD2




Friday, September 05, 2014

விண்ணைத் தாண்டி வருவாயா - பாடல் வரித் திருத்தம்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் "கடலினில் மீனாக இருந்தவள் நான்" என்ற பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். மிக நல்ல பாடல். அதன் வரிகளுமே மிக அருமை. ஆனால் ஓரிடத்தில் மட்டும் கேட்கும் போதெல்லாம் திருத்த வேண்டும் போல இருக்கும்.

படத்தில் நாயகி நாயகனை விரும்புகிறாள். அப்படியிருக்க இப்படிப் பாடல் வரி வருவது நன்றாக இல்லை.

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்

கதைப்படி பார்த்தால், இவ்வரிகள் இப்படி இருந்திருக்கலாம்.

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்  மறுத்தேன் 

அதாவது, சந்தர்ப்ப சூழல்களால், அந்தக் காதலை நாயகி மறுக்க முயல்கிறாள். வெறுக்கவில்லை, மறுக்கிறாள்.

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் மறுத்தேன் 
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

Thursday, June 19, 2014

பிளாக்பெர்ரி10 இல் தமிழில் எழுத - தமிழ் எழுதி

பிளாக்பெர்ரி10 வகை ஸ்மார்ட் கைப் பேசியில் தமிழில் எழுத ஒரு பிரயோகம் ஒன்று தயார். இந்த வகைக் கைபேசிகள் வைத்திருப்போர் தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.

An app to type in Tamil for BlackBerry10 smart phones is available. You can try downloading and installing to make use of it and enjoy typing Tamil.

http://appworld.blackberry.com/webstore/content/56405887/?lang=en&countrycode=CA




Saturday, March 01, 2014

பாலு மகேந்திராவை நினைவு கூர

பாலு மகேந்திரா என்ற திரையுலகப் புதுமை ஒளிப்பதிவாளர், இயக்குனர் அவர்கள் காலமாகிவிட்ட இந்த நேரத்தில், 1982 ஆம் ஆண்டு அவரின் மூன்றாம் பிறை படத்துக்கான விமர்சனம விகடனில் வந்திருந்தது. பொக்கிசம் என்று அவர்கள் மீளப் பிரசுரிக்கும் சில தகவல்களோடு அண்மையில் வெளிவந்த ஒரு விகடனில் காணப்பட்ட இந்தத் தகவலை, பாலு மகேந்திராவை நினைவு கூரு முகமாக இங்கே பகிர்கிறேன்.

அன்னாரின் நினவுகள் என்றும் நிறைவதாகுக.

(ஆனந்த விகடனுக்கு நன்றி)