விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் "கடலினில் மீனாக இருந்தவள் நான்" என்ற பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். மிக நல்ல பாடல். அதன் வரிகளுமே மிக அருமை. ஆனால் ஓரிடத்தில் மட்டும் கேட்கும் போதெல்லாம் திருத்த வேண்டும் போல இருக்கும். படத்தில் நாயகி நாயகனை விரும்புகிறாள். அப்படியிருக்க இப்படிப் பாடல் வரி வருவது நன்றாக இல்லை. ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் கதைப்படி பார்த்தால், இவ்வரிகள் இப்படி இருந்திருக்கலாம். ஒரு நாள் சிரித்தேன் மறு நாள்வெறுத்தேன்மறுத்தேன் அதாவது, சந்தர்ப்ப சூழல்களால், அந்தக் காதலை நாயகி மறுக்க முயல்கிறாள். வெறுக்கவில்லை, மறுக்கிறாள். ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் மறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா
Friday, September 05, 2014
விண்ணைத் தாண்டி வருவாயா - பாடல் வரித் திருத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment