Friday, September 01, 2006

தாய்மொழி வழிக் கல்வியின் அவசியம்

தாய்மொழி வழிக் கல்வியின் அருமை புரிந்த பலரில் இவர்களும் வருகிறார்கள்.
அவர்கள் செயலூக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

சுருக்கம் என்னவென்றால்:
ஆரம்பப் பள்ளிக்கூடங்களில், கற்கை மொழியைக் கன்னடத்திலிருந்து ஆங்கிலமாக மாற்றிக் கொண்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான ஆரம்பப் பாடசாலைகளின் அரச அங்கீகாரத்தைச் செல்லுபடியற்றதாக்கக் கர்நாடக அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

விரிவாக இங்கே காண்க:

Karnataka nips English in the bud - முளையிலேயே கிள்ளு

கேரளாவும் இணைந்து விட்டது


இதனோடு தொடர்பான எனது ஒரு பதிவு இங்கே


அரசு:
முதலில் தமிழக அரச இயந்திரம் தமிழில் இயங்குகிறாதா அல்லது தமிழை இழக்கிறதா என்பதை நோக்குவோம். 

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். அந்த ஆட்சி மொழி எவ்வளவுக்கு ஆட்சி செய்கிறது என்பது சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய விடயம். ஆட்சி எங்கே தொடங்குகிறது? அது சட்ட சபையுடன் ஆரம்பிக்கிறது. தமிழ் நாடு சட்ட மன்றத்தில் ஓரளவு தூய தமிழில் பேசுகிறார்கள் மன்றும் தமிழில் இயங்குகிறது, மகிழ்ச்சியே. சட்ட மன்றத்திற்கு வெளியே வந்தால்? தமிழ் நாட்டு அரச உயரதிகாரிகளில் 90 வீதமானவர்களுக்குச் சரளமாகத் தமிழில் எழுத, வாசிக்க மற்றும் பேசக் கூடிய புலமை இல்லவேயில்லை. இந்த உயரதிகாரிகளிற் பலர் தமிழ் மொழி மூலம் தமது கல்வியை ஓரளவிற்கேனும் கற்றவர்களோ அல்லது தமிழை ஒரு பாடமாகத் தம் பாடவிதானத்தில் கொண்டவர்களோ அல்லது தமிழில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்தவர்களோ இல்லை. இன்னும் பார்த்தால், இவர்களிற் பலர் இந்தியா என்ற கூட்டுப் பொங்கல் நிலையால் வந்த பிற மாநிலக்காரர்கள். இவர்கள் தமிழ் மொழிக்கு அன்னியமானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்ப் புலமை குறைந்த தமிழர்களும், தமிழ்ப் புலமையற்ற பிற மாநிலக்காரர்களும் அதிகாரிகளாகப் பதவியேற்று எப்படித் தமிழ் மக்களின் குறை நிறைகளை நிவிர்த்தி செய்ய முடியும்? தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சினைகளை, சிக்கல்களை இப்படிப் பட்ட அரச அதிகாரிகள் புரிந்து கொள்ள நல்ல தொடர்பு மொழி அவசியமல்லவா? 

மேலும் வாசிக்க கீழேயுள்ள தொடுப்புகளை நாடுங்கள்

”தமிழ்” நாடெனும் மாயை - 1

"தமிழ்" நாடெனும் மாயை - 2

8 comments:

Anonymous said...

தாய் மொழிக் கல்வியென்பதைவிட தாய் மொழி வழிக் கல்வியென்பது மிகவும் பொருந்தும்....

Jeyapalan said...

திருத்தத்திற்கு நன்றி திரு. ஆறுமுகம் அவர்களே. திருத்தி விடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

தாய் மொழியில் படித்ததால்,

சில சமயம் சுத்தத் தமிழில் எழுதுவது ப்ளாகில் எடுபடாமல் போகிறது.
இதற்காக வலைப்பதிவு இலக்கணம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.:-)0
உங்கள் பின்னூட்டம் கொங்கு ராசா பதிவில் பார்த்தேன்.
தமிலில் தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும்.

Jeyapalan said...

வள்ளி,
வரவுக்கு நன்றி.
ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது முழுமையாகப் புரியவில்லை.
அன்புடன்,
ஜெயபால்

Jeyapalan said...

ராம. ரங்கராஜன்,
கருத்துக்கு நன்றி.
நிச்சயமாக, தமிழ் வழிக் கல்வியுடன் ஆங்கிலமும் ஒரு பாடமாகக் கற்பிக்கப் படவேண்டும்.

Anonymous said...

ஆம் தாய் மொழி வழிக் கல்வியே சிறந்தது. யெனில் ஓருவர் தன் தாய் மொழியை மறந்தால் அவரின் வேரை இழந்ததாக அர்தம்.

எடுத்துக்காட்டு அமெரிக்க கறுபர்கள். அவர்களின் உண்மையான நாடு எது மொழி எது என்று எதுவுமே அவர்கழுக்கு தெரியாது

அகரன் -- சென்னை

Jeyapalan said...

வணக்கம் அகரன் (அருமையான பெயர்),

அமெரிக்கக் கறுப்பர்கள் தவிர, எங்களிடமே ஆதாரம் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளிலிலும், பிஜித் தீவுகளிலும் மற்றும் மொரீசியஸ் தீவிலிருக்கும் தமிழர்களும் இந்தியர்களும் தமது வரலாறும் தெரியாது, தம் அடையாலங்களையும் இழந்திருக்கிறார்கள்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Jeyapalan said...

வைசாவின் கருத்தை ஆமோதிக்கிறேன். நன்றி வைசா.