Monday, May 08, 2006

தங்கத்தின் தமிழ்ப் பெயர்

தங்கத்தின் தமிழ்ப் பெயர்:


சும்மா தொலைக்காட்சியை முறுக்கிக் கொண்டிருந்த போது, தமிழ்ச் சேவைகளின் பக்கம் சென்ற போது, ஒரு நிகழ்ச்சி தொடங்குகிறது. படையப்பியின் தங்க வேட்டை. நிகழ்ச்சி ஆரம்பத்தில், தங்கம் பற்றிச் சுவையாக(?) சில தகவல்களை அள்ளி வழங்கினார் படையப்பி. தங்கத்திற்கு வெவ்வேறு மொழிகளில் என்ன பெயர் என்றும் அப் பெயர்கள் எப்படி வந்தன என்றும் கொஞ்சம் சொன்னார். அப்படியே தமிழிற்கும் வந்தார்.
அங்கே தான் வந்தது வில்லங்கம்.
தங்கத்தை நம்ம நாட்டில் எப்படி அழைக்கிறோம்? "கோல்ட்" - ஆம், ஆங்கிலச் சொல்லையே சொன்னார்.
ஆ அம்மா!!!!, நெஞ்சு வலித்தது.
அப்படியே "கோல்ட்" என்று பெயர் வரக் காரணம், காரியம், ....., அத்தனை விளக்கங்களும் அந்த ஆங்கிலச் சொல்லுக்குத் தான், தமிங்கிலத்தில் தறித்து விழுத்திக் கொண்டு இருந்தார்.
அப்பா! படையப்பா, ஆறுபடையப்பா!!! முருகனைக் கூப்பிட்டேன்.
நீ தான் மீண்டும் வர வேண்டும் தமிழைக் காக்க என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தொலக்காட்சியை அணைத்து விட்டேன். இப்பொழுது தெரிகிறதா தங்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்று?

வாழ்க தமிழ் வளர்க்கும் தமிழகத் தமிழ்த் தொலைக் காட்சிகள்.

2 comments:

Muthu said...

///. தங்கத்தை நம்ம நாட்டில் எப்படி அழைக்கிறோம்? "கோல்ட்" - ஆ அம்மா, நெஞ்சு வலித்தது. அப்படியே "கோல்ட்" என்று பெயர் வரக் காரணம், காரியம்,///

Is it true?, or joking? :-)

Jeyapalan said...

தகவல் உண்மையே. நெஞ்சு வலி வெறும் பிரமையே. ஆனால், உண்மையில் அதிர்ந்து விட்டேன். இந் நிகழ்ச்சிகள் முதலிலேயே பதியப்பட்ட நிகழ்ச்சிகள். திருத்தியிருக்கலாம் பொறுப்பாளர்கள். என்ன பொறுப்பிலாத் தனம்!!!

தமிழகத் தொலைக்காட்சி நேயர்கள் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனித் தனியாகக் கடிதம் எழுதலாம். தொலை பேசியில் கூப்பிட்டு முறைப்பாடு செய்யலாம். இந்த வியாபார யுகத்தில், தொலைக்காட்சி நிறுவனத்தினர் நிச்சயம் நேயர்களின் குரலுக்கு மதிப்பளிப்பார்கள். நான் சொல்லிக் கேட்கப் போகிறார்களா என்று எண்ணி இருந்து விட்டால், ஒன்றுமே நடக்காது. அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். ஆக நேயர்கள் செயலில் இறங்க வேண்டும். இதற்காக ஒரு நெடுமாறனோ அல்லது ஒரு திருமாவழவனோ குரல் கொடுக்கத் தேவையில்லை. சாவி நேயர்கள் கையில். திறக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு.
குட்டக் குட்டக் குனியிறவனும் பேயன் குட்டுறவனும் பேயன்.