Sunday, March 03, 2019

திருக்குறள் வேதத்திலிருந்து வந்ததா?

திருக்குறள் வேதங்களிலிருந்து பெறப்பட்ட அறிவியல் நூல் என்று பறைசாற்றலும், புத்தகம் எழுதுவோருமாக பரபரப்பு வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன இப்பொழுது. 
நாமறிந்த வரைக்கும், நண்பர்கள் பலர் மூலமாகவும், நாம் அறிவது, வேதங்கள் எழுதப்படாத ஒரு தொகுப்பென்பதே. பிரம்மாவிடமிருந்து சீடர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது என்பது தான் நாம் தெரிந்திருப்பது.

பிரம்மா மற்றும் அவரின் சீடர்களுக்கே சரியான விளக்கம் இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்.

இப்படியாகக் கடத்தப்படும் வேதம், காலத்துக்குக் காலம் பிறரிடமிருந்து கற்கும் நல்ல கருத்துக்களையும் உள்வாங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லையே.

விக்கிப்பீடியாவின் தரவின்படி, வேதங்கள் எழுதப்பட்ட காலம் ஒரு 1200 ஆண்டுகள் முன்னர் தான். அப்படியிருக்க, 2500 ஆண்டுகள் பழமையான திருக்குறள் வேதத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமே.

இதோ, விக்கிப்பீடியா சொல்வது: (https://en.wikipedia.org/wiki/Vedas)
Due to the ephemeral nature of the manuscript material (birch bark or palm leaves), surviving manuscripts rarely surpass an age of a few hundred years.[43] The Sampurnanand Sanskrit University has a Rigveda manuscript from the 14th century;[44] however, there are a number of older Veda manuscripts in Nepal that are dated from the 11th century onwards.[45]


2 comments:

Anonymous said...

திருக்குறள் 2500 வருடத்துக்கு முதல் எழுதியது என்று யார் சொன்னார்கள் ?
திருவள்ளுவர் ஆண்டு எப்போது தொடங்குகின்றது என்று சொல்லுங்கள் பார்ப்போம் ?

திருக்குறளில் சம்ஸ்கிருத சொற்கள் எப்படி வந்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம் ?

Jeyapalan said...

From Wiki:
https://en.wikipedia.org/wiki/Kural
Its authorship is traditionally attributed to Valluvar, also known in full as Thiruvalluvar. The text has been dated variously from 300 BCE to 5th century CE. The traditional accounts describe it as the last work of the third Sangam, but linguistic analysis suggests a later date of 450 to 500 CE and that it was composed after the Sangam period