Saturday, April 11, 2015

அறிவிப்பாளர்களின் எதிர்காலம் - ?

சொற்களை வாசிக்கும் செயலிகள் (apps) வந்து எதையும் வாசித்துக் காட்டும் கருவியாகி விட்டதால், வாசிக்கும் வேலையோ அல்லது வாசிக்கும் நுணுக்கமோ ஒரு சாதரணப் பொதுமகனுக்கு இனித் தேவையில்லாத ஒன்றாகப் போகிறது. பார்வைக் குறைபாடுடையவர்கள் இனி வாசிக்கச் சிரமப்படத் தேவையில்லை. ஒலிப்பதைக் கேட்கக் காது இருந்தால் இப்போது போதும். எதிர்காலத்தில், காதும் தேவையில்லை என்ற கட்டம் வரலாம்.

வாகனங்களில் வழி காட்டியாகத் திகழும் GPS எனப்படும் கருவி எங்களை வழி சொல்லி நெறிப்படுத்துகிறது. வீதிப் பெயர்களை வாசித்துச் சொல்கிறது.

வாசிப்புச் செயலிகள் எல்லாம் பழைய படங்களில் வரும் இயந்திர மனிதர் போல் கடின நடையில் பேசுவதில்லை. இயல்பாகவே வாசிக்கின்றன. இப்படியான வாசிப்புச் செயலிகளைக் கொஞ்சம் மெருகுபடுத்தி விட்டால், அழகாக எல்லாவற்றையும் வாசிக்கும். நாமும் இனிய குரல்களில் புத்தகங்கள் ”கேட்கலாம்” (வாசிக்கலாம்).

இப்படியே எமது வானொலி, தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களாகப் பணி புரிபவர்களையும் இந்தச் செயலிகள் (இயந்திரங்கள்) அகற்றிவிடும். இதனால் நல்ல பயன் என்னவென்றால், சில தொகுப்பாளர்களின் அலப்பல்களிலிருந்து எமக்கு விடிவு கிடைக்கும். ஆக மொத்தத்தில் தொகுப்பாளர்களின் தொழில்  நாட்கள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு செயலி:
https://play.google.com/store/apps/details?id=com.google.android.tts&hl=en

No comments: