Thursday, March 05, 2015

தமிழ் எழுத்துக்கள் முந்நூற்றுப் பதின்மூன்றா அல்லது முப்பதா? - பகுதி - 2

ஆதி இலக்கணம்

தொல்காப்பியம் உட்பட எல்லாத் தமிழ் மொழியியல் நூல்களும், ’எழுத்துக்கள் முப்பதும் ஆய்தமும்என்றே சொல்கின்றன.

எழுத்தெனப் படுப
அகர முதல் நகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே
- தொல்காப்பியம்

இருந்தும் ஆரம்பக் கல்வி பயிலச் செல்லும் குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்துவது 247 எழுத்துக்கள் கொண்ட அரிச்சுவடி மட்டையை. இந்த 247 எழுத்துக்களோடு மேலதிக சேர்க்கையான கிரந்த எழுத்துக்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய இக்கட்டும் உண்டு. இது எளிதாக்கப்பட வேண்டும்.

இன்றைய தமிழ் அரிச்சுவடி - 313 எழுத்துகளுடன் 

வட எழுத்துக்களுடன் கூடிய 313 எழுத்துக்கள்
கா
கி
கீ
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
ஙா
ஙி
ஙீ
ஙு
ஙூ
ஙெ
ஙே
ஙை
ஙொ
ஙோ
ஙௌ
சா
சி
சீ
சு
சூ
செ
சே
சை
சொ
சோ
சௌ
ஞா
ஞி
ஞீ
ஞு
ஞூ
ஞெ
ஞே
ஞை
ஞொ
ஞோ
ஞௌ
டா
டி
டீ
டு
டூ
டெ
டே
டை
டொ
டோ
டௌ
ணா
ணி
ணீ
ணு
ணூ
ணெ
ணே
ணை
ணொ
ணோ
ணௌ
தா
தி
தீ
து
தூ
தெ
தே
தை
தொ
தோ
தௌ
நா
நி
நீ
நு
நூ
நெ
நே
நை
நொ
நோ
நௌ
பா
பி
பீ
பு
பூ
பெ
பே
பை
பொ
போ
பௌ
மா
மி
மீ
மு
மூ
மெ
மே
மை
மொ
மோ
மௌ
யா
யி
யீ
யு
யூ
யெ
யே
யை
யொ
யோ
யௌ
ரா
ரி
ரீ
ரு
ரூ
ரெ
ரே
ரை
ரொ
ரோ
ரௌ
லா
லி
லீ
லு
லூ
லெ
லே
லை
லொ
லோ
லௌ
வா
வி
வீ
வு
வூ
வெ
வே
வை
வொ
வோ
வௌ
ழா
ழி
ழீ
ழு
ழூ
ழெ
ழே
ழை
ழொ
ழோ
ழௌ
ளா
ளி
ளீ
ளு
ளூ
ளெ
ளே
ளை
ளொ
ளோ
ளௌ
றா
றி
றீ
று
றூ
றெ
றே
றை
றொ
றோ
றௌ
னா
னி
னீ
னு
னூ
னெ
னே
னை
னொ
னோ
னௌ
ஹ்
ஹா
ஹி
ஹீ
ஹு
ஹூ
ஹெ
ஹே
ஹை
ஹொ
ஹோ
ஹௌ
ஷ்
ஷா
ஷி
ஷீ
ஷு
ஷூ
ஷெ
ஷே
ஷை
ஷொ
ஷோ
ஷௌ
க்ஷ்
க்ஷ
க்ஷா
க்ஷி
க்ஷீ
க்ஷு
க்ஷூ
க்ஷெ
க்ஷே
க்ஷை
க்ஷொ
க்ஷோ
க்ஷௌ
ஜ்
ஜா
ஜி
ஜீ
ஜீ
ஜு
ஜூ
ஜெ
ஜே
ஜை
ஜொ
ஜோ
ஜௌ
ஸ்
ஸா
ஸா
ஸீ
ஸீ
ஸூ
ஸூ
ஸெ
ஸே
ஸை
ஸொ
ஸோ
ஸௌ
ஸ்ரீ

எண்ணிக்கைக் குழப்பம்


முதலில், நம் மொழியைக் கற்பிக்கும்போது அந்த மொழி இலகுவிற் பயிலக் கூடிய ஒரு மொழிஎன்ற கருத்தைப் பயிலுவோரிடம் சேர்ப்பிக்க வேண்டும். இந் நிலையில் நம் தற்கால அரிச்சுவடியை அறிமுகப்படுத்தும் போது, எம் அரிச்சுவடி மட்டையைக் காண்பிக்கும் போது, படிக்க வருபவர்கள் குழந்தைகளாகிலும், பெரியவர்களாகிலும் மிரண்டு விடுவார்கள்.
247 முதன்மையான எழுத்துக்களும், மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வட எழுத்துக்களும் (13x , , , , க்ஷ, ....) உண்டென்று அறிமுகப் படுத்த வேண்டியுள்ளது.
அதாவது:
உயிர்
12
ஆய்தம்
1
மெய்
18
உயிர்மெய்
216
வட எழுத்துக்கள்
5x13=65, ஸ்ரீ -1
மொத்தம்
313

இந்த அறிமுகத்தால் மிரட்சி அதிகமாகிப் அது படிப்பவரைத் தயங்க வைக்கும் செயலாகி விடும்.
அத்தோடு, அது என்ன, தனியாக நிற்கும் வட எழுத்துக்கள் தமிழ் அரிச்சுவடியில் இல்லாமல் தமிழ் மொழியில் இருக்கின்றன என்ற குழப்பம் வேறு படிப்போரைத் தாக்கும். தமிழில் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு, தமிழில் கலந்து விட்ட, சில வடமொழி ஓசைகளை ஒலிக்க முடியாமல் இருப்பதால், வட எழுத்துக்கள் சேர்க்கப்பட வேண்டியிருந்த நிர்ப்பந்தத்தை விளக்க வேண்டியிருக்கும்.

சீரற்ற  உயிர்மெய் எழுத்துக்கள்

உண்மையில், நம் தொல்காப்பியம் உட்பட எல்லா தமிழ் மொழியியல் நூல்களும், எழுத்துக்கள் 30 என்றே சொல்கையில் நம் உயிர்மெய் எழுத்துக்களின் சீரற்ற உருவமைப்புகள் அவை அனைத்தையும் அட்டவணைப் படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டன.
இந்தச் சீரற்ற நிலையைக் களைய வேண்டும். நம் மொழி பயிலுதலில், அதை மற்றவர்க்கு அறிமுகம் செய்து வைப்பதை எளிதாக்க வேண்டும். அதற்கான, ஒரு நியமத்தை உலகத் தமிழர் எல்லோரும் பின்பற்ற வைக்க ஒரு பொது வடிவம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.
எல்லா உயிர்மெய் எழுத்துக்களையும் ஒரு பொதுவான, இலகுவான பொறிமுறை மூலம் உருவாக்கப்பட முடியுமானால், நாம் அவற்றைத் தனியாக அட்டவணைப்படுத்த வேண்டியிருக்காது.
இந்தக் கருத்தை அறிஞர்களும் ஆட்சியாளர்களும் கவனத்தில் எடுத்து, இதன் அடிப்படையில் ஒரு ஆய்வு செய்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தகுதரத்தை நிறுவி மொழியின் சிறப்பைக் காலத்திற்கேற்ப வளர்க்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாக உருவெடுக்கும். இந்த நோக்கத்தினால் எழுந்த ஒரு ஆலோசனையே இந்தக் கட்டுரையாகும்.
பகுதி 1

No comments: