Thursday, March 05, 2015

தமிழ் எழுத்துக்கள் முந்நூற்றுப் பதின்மூன்றா அல்லது முப்பதா? - பகுதி 1

தமிழ் எழுத்துக்கள்  முந்நூற்றுப் பதின்மூன்றா அல்லது முப்பதா?

(காப்புரிமம் 2014 யூலை) 

(தமிழ் மொழியை இலகுவிற் கற்பிக்கவும், தமிழ் மொழியின் தடங்கலற்ற வளர்ச்சியை இலகுவாக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளில் ஒன்றாக நம் அரிச்சுவடியை எளிதாக்கும் ஒரு முன்மொழிவு.)

அறிமுகம்

எழுத்தில் மொழி

மனிதன் சமூக விலங்காக வாழ்ந்து பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் தம்மிடையேயான தொடர்பாடலை முதலில் பேச்சில் தொடங்கினான். அதுவே அவனது மொழியாக வடிவம் பெற்றது. காலப் போக்கில் பேசுவதை எழுதி அல்லது பதிந்து வைக்க வேண்டும் என்ற தேவை எழுந்த போது மொழிக்கு ஓர் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தம்மிடையே வழங்கிவந்த எல்லா ஒலி ஓசைகளையும் பகுத்து அவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுத்து அரிச்சுவடிகள் உருவாக்கப்பட்டன. அக்காலத் தேவைக்கு, அக்காலத்தில் வழக்கில் இருந்த ஓசைகளை உச்சரிக்கு முகமாக எழுத்துக்களை உருவாக்கியது மனித குலம்.
எழுத்து வடிவம் உருவாகிய பின்னர் அதனை எல்லோரும் ஒரே வழியில் பின்பற்ற ஒரு பொது வடிவம் அதாவது ஒரு நியமம் வேண்டியிருந்தது. அந்த நியமத்தை மனிதன் ஏற்படுத்தும் போது முதலில் வரையறை செய்ய வேண்டியிருந்தது தனித் தனி எழுத்துக்களை அறிமுகம் செய்யும் அரிச்சுவடியை. அதைத் திட்டமிட்டு வரையறை செய்தான் அக்கால மனிதன்.
காலம் மாறிய போது, மனிதர்கள் பல சமூகங்களாலான ஒரு குழுமம் என்ற நிலை உணரப்பட்ட போது, பல வித மொழிகள் சந்தித்தன. பல மொழிகள் தத்தமக்கெனப் பல வித்தியாசமான ஒலிகளைக் கொண்டிருந்தன. இவ்வொலிகள், மொழிகளைப் புதுப் பரிமாணத்தில் பயணிக்க வைத்தன. ஒவ்வொரு மொழியும், தன்னை விரிவு படுத்தித் தன்  வரைவிலக்கணங்களை விசாலப்படுத்திக் கொள்ளலாயின. ஆக, எல்லா மொழிகளுமே  தாம் தோன்றியதிலிருந்து தம்மைப் புதுப்பித்து மெருகூட்டி அலங்கரித்து வளர்ந்து வந்தன.

நியமங்களும் மாற்றங்களும்

இந் நேரங்களில், மொழியின் கட்டுக் கோப்பைக் குலைக்கா வண்ணம் அவற்றின் வளர்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டார்கள். நியமங்கள் மாறிக் கொண்டிருந்த போதும் நியமங்களைக் கை விடாமல் பரிணாம வளர்ச்சியை மொழிகள் கண்டு வந்தன.

தமிழ் எழுத்துக்கள்

மொழிகள் பலவாகிப் பிரவாகித்த உலகில், தமிழ் மொழி பழம் பெரும் மொழிகளில் ஒன்றெனப் பெயர் பெற்றுச் சிறந்த வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒரு மொழியாகத் திகழ்கிறது.
தமிழ் மொழிக்கு வலுச் சேர்க்கவென்று கருதிப் பல கூட்டல்களும் கழித்தல்களும் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்துள்ளன. வட எழுத்துக்களின் சேர்க்கை, -காரங்களும் -காரங்களும் இலகு படுத்தப்பட்டமை என்பவை சில எடுத்துக்காட்டுகளாம். தமிழ் மொழியில் இருந்திருக்காதநிறுத்தற் குறிகள்கூட ஒரு அண்மைய உள் வாங்கல் தான். ஆக, உள்வாங்கலும், வெளியேற்றலும் தமிழ் மொழிக்குப் புதிதல்ல. தமிழ் மொழி மட்டுமல்லாது உலக மொழிகள் பலவும் பல மாற்றங்களை உள் வாங்கித் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதை நாம் அவதானிக்கலாம்.

தமிழ் அரிச்சுவடியில் உரிய இடம் இல்லாமல் தனியாக நிற்கும் வட எழுத்துக்களான , , , , க்ஷ”  திரிசங்கு சொர்க்கத்தில் நின்றுகொண்டு தமிழ் மொழியில் பட்டும் படாமல்  உள் வாங்கப்பட்டுப் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
லை, ளை, றா, ணா போன்ற மாற்றங்கள் தமிழ் எழுத்துக்களின் சீரான வரி வடிவை  இலகுவாக்கிய இன்னொரு முயற்சி.
அறிமுகம்

தமிழ் அரிச்சுவடி 2014 - மீளாய்வு

இந்த வாரம் விகடனில் வெளிவந்த மதன் கார்க்கி அவர்களின் தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பற்றி பலதரப்பு விமர்சனங்கள் பல முனைகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. கருத்துச் சுதந்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியவருக்கும் சர்ச்சையை அறிந்து கொண்டவர்க்கும் உண்டு. இதனால் நல்லது விளைந்தால் நன்மையே.

தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் எவ்வளவு தான் சொன்னாலும், செய்தாலும் அதை முறையாக அமுல் படுத்த ஒரு பலம் மிக்க அரச எந்திரம் தேவை. அப்படியான எண்ணத்தில் அரச எந்திரமோ அல்லது ஓர் அமைப்போ இல்லாதவிடத்து அமுலாக்கம், கட்டுப்பாடு இல்லாது காட்டாற்று வெள்ளம் போல் தமிழ் மொழி ஓடிக்கொண்டேயிருக்கும்.

ஒரு உதாரணத்திற்கு, ஆங்கில எவ் (F)  ஐக் குறிக்க "ஃ" ஐப் பயன்படுத்தினார் ஒரு பத்திரிகையாளர். யார் அதை அனுமதித்தது அல்லது யார் அதை தடுத்து நிறுத்த முன் வந்தார்?
அது தன்பாட்டுக்கு "ஃ" இன் பொருளைச் சிதைக்கவில்லையா?
மதன் கார்க்கிக்குக் கண்டனம் தெரிவிப்பவர்கள் இதை மறந்ததேனோ?

சரி, இந்தப்  புதிய சர்ச்சைக்கு மேலும் கொஞ்சம் வலுச் சேர்க்க இதோ  என் பங்களிப்பு.

பல வருடங்களாக என் சிந்தையில் இருந்த நெருடலுக்கு ஒரு கட்டுரை வடிவம் கொடுப்போமென்று எண்ணி  2014 இன் ஆரம்ப காலத்தில் ஒரு கட்டுரையை எழுதி அதை உலகத் தமிழ் இணைய மாநாடு 2014 இல் சமர்பிக்க எண்ணி அனுப்பினேன். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் அந்தக் கட்டுரையை என்னால் சமர்ப்பிக்க முடியாமல் போனது. அந்தக் கட்டுரையும் மதன் கார்க்கியின் யோசனையை ஒத்தது தான். அதனால் அதை இங்கே பிரசுரிக்க எண்ணுகிறேன்.

இந்த ஆய்வு பற்றிய அஞ்சல், கீழே.

தொடர்ந்த பதிவுகளில், அக் கட்டுரையை வெளியிடுகிறேன்.

விளைவு அரிச்சுவடி:




From: K Kalyanasundaram
To: Jeyapal
Sent: Wednesday, July 30, 2014 6:18 AM
Subject: Your paper has been accepted for oral presentation at the Tamil Internet 2014 conference

Letter of acceptance of the abstract for Tamil Internet 2014 conference

Dear K.Jeyabalasingham:

We are pleased to inform that your paper with the following abstract
title  "தமிழ் அரிச்சுவடி 2014 - மீளாய்வு"
has been accepted for oral presentation (duration 15+ 5 min) in one of 
the technical sessions of the forthcoming Tamil Internet 2014 conference. 

Acceptance of paper by CPC is under the assumption that at least 
one author of the paper attend the conference to present the paper 
in person. No proxy or remote presentation is permitted. Hence
we would appreciate much if you can reconfirm your participation
(indicate the author who will present the paper if the author for corresp.
himself/herself cannot present the paper) before end of month
(31 July). For papers for which we do not get reconfimation by email
the slot will be allocated to other abstracts that are in the waiting list.

Full length version of your paper has to be submitted within TEN
DAYS of the acceptance of your paper (in Tamil Unicode, as a
formatted Word .doc/.docx file) to the address <cpc2014@infitt.org>
(4-6 pages A4, one inch margin on all sides, Tamil unicode font).
Full length version of the papers will be reviewed by CPC members
and in some cases a revision as per the advice of CPC may be mandatory. 
Full length version of the papers will be included in the Conference
Proceedings, to be published both as Hardcopy and in soft versions.

Online registration gateway for the conference is open already 
and you are strongly encouraged to register as soon as possible.
Only those who register for the conference will get further information
on using bulk hotel room booking arrangements and other conference
related information in due course. Please visit the conf. website

We thank you for your support for the TIC 2014 and we look forward
to your presentation at Pondicherry in two months.  

anbudan
Kalyan

Dr. K. Kalyanasundaram
Chair, Conf. Program Committee CPC
Tamil Internet Conference 2014

Saturday, February 07, 2015

ஐ - திரைப் படம்

ஐ - என்ற படம் வந்து நாளாகி விட்டது. அதனால் இதைப் பற்றி எழுதுவதனால் வசூல் பாதிக்கப்படாது என் மேல் யாரும் கோபப்பட மாட்டார்கள் என்றும் எண்ணி இப்போது சில வார்த்தைகள் கீழே.

என்ன நல்லவை இருக்கின்றன?
1. விக்ரம் மற்றும் நடிகர்கள்
2. ஆணழகர்களையும் ஆணழகர் போட்டியையும் வெளிக் கொணர்ந்தது
3. சீனக் காட்சிகள்
4. பவர் சுடர் (ஸ்டார்)
5. இயக்கம், ஒளிப்பதிவு, இசை

என்னை ஏமாற்றியவை:

  • ஐ என்ற தமிழில் அரிதாக பயன்படுத்தப்படும் சொல்லைக் கொண்டு வந்து அறிமுகம் செய்கிறார் என்ற எதிபார்ப்புப் புண்பட்டது. ஐ என்றால் தலைவன், உயரியவன் என்ற பெரும் பொருள் வெளியில் வரவில்லை. இது போல் பெயர்களில் விளையாடுவது சங்கருக்கு வாடிக்கையானது தான். ஜீன்ஸ், சிவாஜி போன்றவை.
  • அதற்குத் தந்த விளக்கம் மோசம். ஐ என்பது Influenza என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்தாம், சரி. ஆங்கிலத்தைத் தமிழில் எழுதியிருக்கிறார். (வரி விலக்குக் கிடைத்ததா?) பொதுவாக, அந்த ஐ வைரசால் வருவது ஒரு வகைத் தடிமன், காய்ச்சல், இருமல். மேலை நாடுகளில், குளிர் காலத்தில் ஒரு இயல்பான நிகழ்வு, Flu என்று சுருக்கமாகச் சொல்வார்கள். அதற்குத் தடுப்பு மருந்து போடுவதும், மக்களின் வாடிக்கையான விசயம். இந்த ஐ விக்ரமை அப்படி விகாரமாக்கு மென்பது, வைரமுத்துவின் அதிகப் பிரசங்கித் தனமான சில கவிதைகள் போன்றது.
  • ஆணழகர்ப் போட்டியில் நடைபெறும் சண்டை - அர்த்தமற்றது, தப்பெண்ணக் கருவை வெளியிடுகிறது.
  • எமி - பெரிதாகப் பொருந்தவில்லை. (என்று தணியும் இந்த வெள்ளை, அரை வெள்ளை மோகம்?)
  • ”சப்பை எடுடா வண்டியை” - இது போல் ஒரு வசனம். மிக இழிவான வார்த்தைப் பிரயோகம். இந்தியனின் மதிப்பைக் கெடுக்கும் ஒரு தவறு. ஆங்கில மொழி பெயர்ப்புச் செய்தவர் அதை என்ன செய்தார் என்று கவனிக்கவில்லை. பொறுப்புடன் கூடிய கவனம் தேவை.
  • அந்த அழகுபடுத்தும் கலைஞரை, அவரின் பலவீனத்தைக் கொண்டு நையாண்டுவது, இன்னொரு இழி நிலை. அப்படி நையாண்டி செய்வது தவறு என்று எங்காவது ஒரு இடத்தில் காட்டியிருக்கலாம். சமுதாயப் பொறுப்புள்ள இயக்குனர் கொஞ்சம் பிறழ்வது தெரிகிறது.
  • கடைசிச் சண்டைகள் அர்த்தமற்றவை, அலுப்படிக்கின்றன.
  • சங்கர் படமென்று போனேன், சங்கர் ஒரு படி இறங்கியிருக்கிறார்.

Saturday, January 31, 2015

பறை முழக்கமும் வேட்கையும்

அண்மையில் ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு செய்திக் கட்டுரையை வாசித்தபோது மிக வியப்பாக இருந்தது. சமுதாய உத்வேகம் கொண்ட மனிதர்கள் எத்தனை கோணங்களில் இருந்து, எப்படி எல்லாம் முட்டி மோதுகிறார்கள் என்பது  சிந்திக்க வைத்தது.  இக் கட்டுரையில் வரும் நபர்களின் பெயர்கள் சிலிர்க்க வைக்கின்றன. மணிமாறன், சமரன், மகிழினி, இனியன் ....
புனை பெயரோ என்று சந்தேகப்படவும் வைக்கிறது. தமிழிற் தோய்த்தெடுத்த பெயர்கள். வாழ்த்துகள்.

இவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கையில், இவை போல், சமுதாயத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்காக இயக்கங்களும், கட்சிகளும் ஆரம்பித்து உழைக்கும் தியாகச் செம்மல்களை வியந்து பார்த்த காலங்களும் நினைவுத் திரையில் வருகின்றன.

சாதிப் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுகிறார்களே, பிரிவுகளை  வரையறுத்து அவற்றைப் புதுப்பித்து அவற்றைக் காலத்தோடு அழிய விடாமல் வாழ வைப்பதற்கு ஒரு ஊடகமாகச் செயற்படுகிறார்களே என்று எதிர்க் கருத்துக்கள் கூட எழுந்தன. இருந்தும் அந்த இயக்கங்களால், கட்சிகளால், சில ஒடுக்கப்பட்ட மக்கள் பல வாய்ப்புக்களைப் பெற்று முன்னிலைக்கு வந்ததும் கண்கூடே நடந்தும் இருக்கின்றன. அதன் பக்க விளைவாக விளைந்த சோகம்-துரோகம்-தோல்வி என்றும் ஒன்று எரிவதை மறுக்க முடியுமா?

கட்சியாலோ, இயக்கத்தாலோ முன்னிலைக்கு வந்து விட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களுடன் கைகோர்த்துச் சவுரிமைச் சமுதாயம் உருவாகலுக்கு தடைக்கல்லாக அல்ல மலையாக முளைத்தார்கள். கலப்புத் திருமணங்களை எதிர்த்தார்கள். அப்படிச் செய்தவர்களை எரித்தார்கள், செய்ய எண்ணியிருந்தவர்களைப் பயமுறுத்தினார்கள்.
எப்படிப்பட்ட தலைவர்கள் இவர்கள்?
எப்படித் தீரும் அடிமைத் தளை, வர்க்க பேதம்?
எப்படி மலரும் சமத்துவம்?

இப்படிப்பட்டவர்களின் செயற்களைப் பார்க்கும் போது, ஒரு பிரபல ஆன்மீகவாதியொருவரின் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வருகிறது.

ஆன்மீகி: The Indian communities in London and San Francisco are trying to become -you know the word? Sahib?
பேட்டி எடுப்பவர்: [Laughs] Westernized. [They both laugh] A very great social anthropologist at the university has written something very interesting. He says there are two processes- the process of Westernization among brahmanas, mainly the upper class, and the process called Sanskritization, which is the process of adopting brahmana rituals, etc., by the so called lower classes, even untouchables. It is very interesting process in India just now. But, India's position, unfortunately, is problematic.
ஆன்மீகி: The difficulty is that India is nowhere. They are trying to imitate Western life, but from a materialistic or technical point of view, they are one hundred years back.


இதனைப் புரிந்து கொண்டு பார்த்தால், உண்மையில், சாதி இயக்கங்களும் கட்சிகளும் வர்க்க பேதங்களைக் களைய முயலவில்லை. மாறாக அந்தச் சாதீயப் படியில் மேலேறி வரவே முயன்றிருக்கிறார்கள் என்பது புரியும். சில படிகள் மேலே வந்தவுடன், தமக்குங் கீழே சில படிகளில் இன்னுஞ் சிலர் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தவுடன், ஒரு குரூர புத்தியால் அவர்களை மிதிக்க வேண்டும் என்றும் துணிகிறார்கள்.

இப்படியானவர்களிலிருந்து மக்களை மீட்டு, நல்ல நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், கல்வியறிவு, அடிப்படை மனிதவுரிமை பற்றிய கல்வி ஒடுக்குபவர்களுக்கும், ஒடுக்கப்படுபவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
பள்ளியில் படித்த நல்லொழுக்கங்களில் விதிவிலக்குகள் உண்டென்று வீடுகளிற் புகட்டும் பெரியவர்கள் அதை நிறுத்திப் பொறுப்புடன் வாழ வேண்டும்.

சரி, இவ்வளவு எழுத வைத்து விட்ட காடுரை இதோ.

நன்றி - ஆனந்தவிகடன் 2012











Wednesday, September 10, 2014

ஆன்ட்றொயிட் இல் தமிழ் எழுதிப் பகிர ஒரு செயலி

ஆண்ட்றொயிட்  வகை ஸ்மார்ட் கைப் பேசியில் தமிழில் எழுத ஒரு பிரயோகம் ஒன்று தயார். இந்த வகைக் கைபேசிகள் வைத்திருப்போர் தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.



An app to type in Tamil for Android smart phones is available. You can try downloading and installing to make use of it and enjoy typing Tamil.

download here

Full address: http://www.amazon.com/dp/B00NCD8TYG/ref=cm_sw_r_tw_dp_Evleub0R3PYD2




Friday, September 05, 2014

விண்ணைத் தாண்டி வருவாயா - பாடல் வரித் திருத்தம்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் "கடலினில் மீனாக இருந்தவள் நான்" என்ற பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். மிக நல்ல பாடல். அதன் வரிகளுமே மிக அருமை. ஆனால் ஓரிடத்தில் மட்டும் கேட்கும் போதெல்லாம் திருத்த வேண்டும் போல இருக்கும்.

படத்தில் நாயகி நாயகனை விரும்புகிறாள். அப்படியிருக்க இப்படிப் பாடல் வரி வருவது நன்றாக இல்லை.

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்

கதைப்படி பார்த்தால், இவ்வரிகள் இப்படி இருந்திருக்கலாம்.

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்  மறுத்தேன் 

அதாவது, சந்தர்ப்ப சூழல்களால், அந்தக் காதலை நாயகி மறுக்க முயல்கிறாள். வெறுக்கவில்லை, மறுக்கிறாள்.

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் மறுத்தேன் 
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

Thursday, June 19, 2014

பிளாக்பெர்ரி10 இல் தமிழில் எழுத - தமிழ் எழுதி

பிளாக்பெர்ரி10 வகை ஸ்மார்ட் கைப் பேசியில் தமிழில் எழுத ஒரு பிரயோகம் ஒன்று தயார். இந்த வகைக் கைபேசிகள் வைத்திருப்போர் தரவிறக்கம் செய்து பயன் பெறுங்கள்.

An app to type in Tamil for BlackBerry10 smart phones is available. You can try downloading and installing to make use of it and enjoy typing Tamil.

http://appworld.blackberry.com/webstore/content/56405887/?lang=en&countrycode=CA