Wednesday, October 04, 2006

கணினியில் தமிழ் - பகுதி 7



-1- - -2- - -3- - -4- - -5- - -6-



கணினியில் தமிழ் - பகுதி 7

இப்படியாகக் கணினியில் தமிழ் தவழத் தொடங்கி, எழுந்து நடை பயின்று, இன்று ஒருங்குறியாக நிமிர்ந்து நிற்கிறது. பற்பல இணையத் தளங்களும் மென் பொருட்களும் தேடல் இயந்திரங்களும் இப்பொழுது ஒருங்குறி மூலம் மிகப் பிரபலமாகி விட்டன. ஒருங்குறி எழுத்துருக்களை இப்பொழுது கணினியில் அடிப்படையிலேயே சேர்த்தும் விட்டார்கள். இதனால் எல்லோரும் இன்புற்றிருக்க இலகுவாகக் கோலோச்சுகிறது ஒருங்குறி.

இணையக் கடைகள், பிறரின் கணினிகள் போன்றவற்றில் ஈ-கலப்பையோ அல்லது கீ-மானோ இல்லாதவிடத்து, சுடச் சுட ஒருங்குறியில் அல்லது பாமினியில் தமிழை அடிப்பதற்கு உதவியாக திரு. சுரதா யாழ்வாணன் , ஈழம் எழுதி என்ற கருவியையும் இணையத்தில் தந்துளார். அதன் தொடுப்பைப் பின்னாலே தருகிறேன்.

ஒருங்குறித் தமிழ் இப்பொழுது எதிலும், ஏன் எமது வலைப் பூக்களிலுங் கூடக் கோலோச்சுகின்ற போதும், ஆங்காங்கே பல வல்லுனர்கள் கணினியில் தமிழின் இருப்பைச் செம்மை செய்ய அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் கூட டாப் (TAB), டியூன் (TUNE) என்றெல்லாம் பல முனைகளில் ஆய்வுகள் நடக்கின்றன. எல்லாம் நன்மையைத் தமிழுக்கும் தமிழருக்கும் தரட்டும்.

இதுவரை என் தொடரைத் தொடர்ந்து வந்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. இதில் இருக்கும் குறைகள், தவறுகள் என்பவற்றை தயவு செய்து மன்னியுங்கள். அப்படியே, உங்கள் கருத்துக்களை எனக்குப் பின்னூட்டமாகவோ தனி மின்னஞ்சலிலோ தெரிவியுங்கள்.

மீண்டும் நன்றி, வணக்கம்.


பிற் குறிப்பு:

மேலதிகமாக வாசிக்க விரும்புபவர்களுக்காக சில இணையத் தளங்களின் முகவரிகளைக் கீழே தருகிறேன். இவை தவிர மேலும் முகவரிகள் தெரிந்தவர்கள் இங்கே அவற்றை இடுங்கள்.

கீ-மான்:: keyman
ஈ-கலப்பை:: http://thamizha.com/modules/mydownloads
ஈழம் எழுதி :: http://www.suratha.com/eelam.htm
ஒருங்குறி :: http://unicode.org/faq/tamil.html
தகுதரம் :: http://www.tscii.org/
தமிழா :: http://thamizha.com/
விக்கிபீடியா :: http://ta.wikipedia.org
தமிழ்.நெட் :: http://www.tamil.net/
அகத்தியர் மடற்குழு :: http://groups.yahoo.com/group/agathiyar/
அகத்தியர் ஆவணம் :: http://www.treasurehouseofagathiyar.net/
தமிழாராய்ச்சி மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil_araichchi
தமிழாராய்ச்சி :: http://www.araichchi.net/
மெய்கண்டார் மடற்குழு :: http://groups.yahoo.com/group/meykandar/
தமிழுலகம் மடற்குழு :: http://groups.yahoo.com/group/tamil-ulagam/
உத்தமம் :: http://www.infitt.org/
தமிழ் இணையப் பல்கலைக் கழகம் :: http://www.tamilvu.org/
தமிழ் மின்னூலகம் :: http://tamilelibrary.org/
மதுரைத் திட்டம் :: http://www.tamil.net/projectmadurai/
இதர :: http://www.geocities.com/athens/7444/


-1- - -2- - -3- - -4- - -5- - -6-

6 comments:

Anonymous said...

டாப் (TAB)?
நீங்கள் டாப் எழுத்துருவைச் சொல்கிறீர்களா? அதைக் கணிச்சங்கம் தவிர யாரேனும் பயன்படுத்துகிறார்களா? திண்ணைகூட ஒருங்குறிக்கு மாறிவிட்டதே?

Jay said...

இப்போது எனும் புதிய ஒருங்குறி அமைக்கும பணி நடைபெறுகின்றதே!!
http://thamizhblog.blogspot.com/2006/10/26-tune.html

Jeyapalan said...

வைசா, மயூரேசன்,
இந்தக் கட்டுரை யாருக்காவது பிரயோசனப் பட்டால் நல்லது தான்.
வரவுக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

Jeyapalan said...

1998/99 அளவில் தகுதரம்-ஆவரங்கால் எழுத்துரு மூலமும், பின்னர் இயங்கு எழுத்துரு பாவித்தும் ஒரு இணையத் தளத்தை உருவாக்கியிருந்தோம். அது மறந்தே போய் விட்டது. அங்கே இங்கே என்று இடம் மாறி இப்பொழுது இங்கே இருக்கிறது.

குழந்தைப் பக்கம்

மணிவானதி said...

தமிழ்க்கணினிப்பற்றிய சிறந்த சில தகவல்களைக் கண்டு வியந்தேன். நான் எழுதிய நூல்களான “ இணையத்தில் தமிழ்” (2007) “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, (2009) “இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்”,(2011) “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்”(2012) நூல்களில் இல்லாத சில வரலாற்று தகவல்கள் கிடைத்துள்ளது. மிக்க நன்றி. உத்தமம் பற்றி கொஞ்சம் எழுதியிருக்கலாம். பரவாயில்லை. உங்களது தொடர்பு முகவரி தேவை. எனது அஞ்சல் முகவரி mkduraimani@gmail.com

Jeyapalan said...

வணக்கம் மணிவானதி,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் முதற்கண் நன்றி.

எனக்குத் தெரிந்த வரை, கணினியில் தமிழ் என்பதைத் தொகுத்து எழுதியிருக்கிறேன். இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது, சில அன்பர்கள் இதனை விக்கிப்பீடியாவிலும் எழுதுமாறு ஊக்கப்படுத்தினார்கள். அதன் படி, இதை நான் எழுதும் போது, விக்கிப்பீடியாவின் வழக்கப்படி, பலரின் பங்களிப்பில், அந்தக் கட்டுரை மெருகூட்டப்பட்டும், மேலும் பல தகவல்களுடனும் அங்கே உள்ளது. அதன் இணைப்பு இதோ: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

https://ta.wikipedia.org/s/5v8

உங்கள் எழுத்து முயற்சிகளுக்குப் பாராட்டும் நன்றியும்.
எனது முகவரியைத் தனியான அஞ்சலில் அனுப்பியுள்ளேன்.

அன்புடன்,
செயபால்