Sunday, September 24, 2006
கணினியில் தமிழ் - பகுதி 2
-1- - -3- - -4- - -5- - -6- - -7-
எழுத்துருக்களில் (fonts) குறிப்பிடத் தக்கதாகவும், பரந்த அளவில் பாவனயில் இருந்தவையாகவும் சிலவற்றைக் குறிப்பிடலாம். மைலை (Mylai), பாமினி (Bamini) போன்றவை பிரபலமாக இருந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. எழுத்துருவின் பாவனையிலிருந்த ஒரேயொரு சிக்கல் விசைப்பலகை (keyboard) தான்.
கணினியில் இருக்கும் விசைப்பலகை பெரும்பாலும் ஆங்கில மொழிக்குரியது. தமிழ் எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தின் விசைப்பலகையினை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்டவை. தமிழ்த் தட்டச்சுத் தெரிந்திருந்தவர்களுக்குத் தமிழில் மென்பொருட்களைத் தமிழ் எழுத்துரு மூலம் உபயோகிப்பது இலகுவாக இருந்தது. இதனால் இந்த எழுத்துருக்கள் தமிழர் தாயகங்களில் பிரபலமடைந்தன. அங்கே இருந்த கணினி வல்லுனர்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற எல்லோரும் தங்களுக்கென அழகழகாகப் பல எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டனர். இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கில மூல மென்பொருட்களிலும் நூறு வீதம் சரியாக ஒத்துழைக்கவில்லை. சில சமயங்களில், சில மென்பொருட்களில் சங்கடங்களும் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பிரயோகங்களான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறவேற்றக் கூடியதாக இருந்தன.
தனித்தனியாகத் தன்தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகளை வலை வேலைப்பாட்டால் இணைத்து கணினிகளையும் அவற்றின் பிரயோகங்களையும் ஒரு படி உயர்த்தி வைத்து மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாகப் பூர்த்தி செய்யத் தொடங்கினோம். இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் கால கட்டத்தில் (90 களில்) தொடர்பாடற் சாதனமாகப் பரிமணிக்கத் தொடங்கின. மின்னஞ்சல் பாவனை பிரபலமாகத் தொடங்கியது. யூனிக்ஸ் (UNIX) இயங்கு முறைக் (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முதலிலேயே இருந்தன. தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சற் தொடர்பாடல் பிரபலமாகத் தொடங்கும் போது தான் தமிழைத் தொடர்பாடலில் பாவிக்கும் தேவை எழுந்தது. தனிப்பட்டோரின் எழுத்துருக்கள் இந்த இடத்தில் கொஞ்சம் இடறத் தொடங்கின.
................................... தொடரும்
-1- - -3- - -4- - -5- - -6- - -7-
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
the biggest problem in blogger is i want to link your technical writings in Tamil but you dont have categories facilty. I want to link it at my webgypsy links. try wordpress cause your writing on tamil web/comp is fantastic
WebGypsy OSAI Chella
நல்ல தொகுப்பு. தமிழில் எழுத மற்றும் வலைதளங்களை படிக்க பயர்பாக்ஸை உபயோகப்படுத்தலாம். பயர்பாக்ஸ் - பத்மாவும், தமிழ்கீயும் ஆகிய நீச்சியை பயன்படுத்தலாம்.
பயர்பாக்ஸ் - பத்மாவும், தமிழ்கீயும்
http://www.balachandar.net/node/170
ஈ-களப்பை
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3
இவையனைத்தும் யுனிக்கோடு எழுத்தச்சுகளாகும்.
நன்றி
பாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
செல்வா, பாலச்சந்தர்,
உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
Post a Comment