தேவாலயந் தகர்ந்தது
செஞ்சோலை சிதறியது
சோலையின் தளிர்கள்
கருகின தீய்ந்தன
கயவர்தம் காட்டுக்
கடும்போக்கில்
ஐநாவே ஐயா நாட்டோரே
அனைத்துலகச் சட்டங்கள்
அழித்தோரைச் சாடாவோ
அல்லது
அழித்தவர் குருக்களோ
பாடுவீரோ சரணம்
பலியானது புலிகள் என்று
பாடுவீரோ பல்லவி
பக்கத்திற் சென்று பார்க்கப்
பாதுகாப்பு இல்லை என்று
பாடுவீரோ மங்களம்
பேசுவீர் பேசுவீர்
பேதங்கள் களைவீர்
பேசியதன் செயல்வடிவம்
பேய்வடிவில் பெறுவீர் என்று
பாடுவீரோ
எப்படிப் பாடுவீரோ
செயபால், 2006/08/14
2 comments:
//செஞ்சோலையுஞ் சிதறியது இன்று
இளந்தளிர்கள் கருகின //
மிகவும் வேதனைக்கு உள்ளாக்கிய செய்தி.
என்ன ஒரு மிருகத்தனம்.
வரவுக்கு நன்றி.
Post a Comment