Friday, October 24, 2008

தமிழ்ப் பள்ளிகளில் கடவுள் வாழ்த்து

தமிழர் மத்தியில் பல மதத்தவர்களும் இருப்பதால், நாம் மத சார்பற்ற ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. தமிழ் மொழியால் இணந்த ஒரு பெரு மக்கள் சமூகமென நாம் திகழ வேண்டும். உலகப் பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகை இதை கருத்திற் கொண்டே தான் போலும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் எந்த மதக் கடவுளையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டு வணக்கம் செலுத்தாது தமிழனின் பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரவர் தமது விருப்பப்படி தமது மத வழிபாடுகளைக் கைக்கொள்வதில் எந்த விதத் தடங்கல்களையும் தமிழர் நிர்வாகங்கள் ஏற்படுத்தவும் கூடாது. மக்களின் மத நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில், தமிழ்ப் பள்ளிகளில் பாடசாலை நாள் ஆரம்பத்தில் கடவுள் வாழ்த்து என்ற பழக்கத்தை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஔவையின் கருத்தோடும் மற்றும் பலரின் மூத்த அறிவுரைகளோடும் கலந்து ஒரு கடவுள் வாழ்த்தை இங்கே செயற்படுத்துவோமா?

கடவுள் வாழ்த்து

அம்மா அப்பா வணக்கம்
ஆசிரியர்களே வணக்கம்
இறையருள் வேண்டி வணக்கம்
ஈதல் செய்யவே இணக்கம்

உலகம் உய்யவே உழைப்போம்
ஊருடன் சேர்ந்தே வாழ்வோம்
எவர்க்கும் உதவத் தயங்கோம்
ஏலாதவரைக் காப்போம்

ஐயந்திரிபறக் கற்போம்
ஒற்றுமை யொன்றே நினைப்போம்
ஓதல் செய்தலை நிறுத்தோம்
ஔடதந் தவிர்க்க முயல்வோம்

(அ)தெலாம் வேண்டி வணக்கம்
வணக்கம் வணக்கம்

kadavul_vazhthu.mp3 - பாடலைக் கேட்க

5 comments:

நாமக்கல் சிபி said...

ஆஹா! அருமையான பாடல்!

Jeyapalan said...

பாராட்டுக்கு நன்றி சிபி. இதை முடிந்த வரை நடை முறைப் படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

தமிழ் said...

அருமையான
கருத்து மட்டுமல்ல
பாடலும்

Jeyapalan said...

திகழ்மிளிர் உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

Jeyapalan said...

ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.