Saturday, January 17, 2009

வாழ்க திருமா

திருவாளர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் உண்ணா நோன்பு வெற்றியடைய வாழ்த்துகள். வன் காதுகளில் எதுவும் ஏறாது, உனக்கு ஏன் இந்தப் பாதை? எனக்குச் சரியாகப் படவில்லை. என் அன்பான வேண்டுகோள் திரு இந்த உண்ணா விரததைக் கை விட வேண்டும் என்பதே. திலீபனும் அன்னை பூபதியும் போதும்.


நீதி கேட்டு முழங்குகின்றாய் திருமா
முரசு கொட்டி வாழ்த்துகின்றோம் திருமா
தொல் காப்பியனே தந்தையான திருமா
நல் காப்பியமே உந்தனது நோன்பு

உன் நோன்பு வெல்ல வேண்டும்
உன் உறுதி ஓங்க வேண்டும்
உன் போலத் தலைவன் வேண்டும்
தமிழ் வாழ நீ வேண்டும்

கல்லில் கூட நார் உரிக்கலாம்
மணலில் கூட நார் திரிக்கலாம்
கண்ணை மூடிக் கட்டியோர் முன்
உன்னை நீயும் மாய்க்கலாமோ

பலபேரை வாழவைத்த இந்தியா
தமிழோரை வீழவைப்ப துத்தியா
பிராந்தியத் தலையே இது நீதியா
தலை கால் புரியாத போதையா

அகிம்சைக்கு ஆணிவேரே காந்தியார்
ஆணிவேர் பாய்ந்தவூரே இந்தியா
ஆணிவேர் ஆடியே போகுமா
காந்தியே ஆடியே போவாரா

நீடூழி நீ வாழ்க திருமாவளவா
தமிழ் வாழ நீ வாழ்க அருமைவளவா
உன் சேயை மதித்திடு இந்தியா
உன் மதிப்பைக் காத்திடு இந்தியா

1 comment:

Anonymous said...

காந்தியின் உண்ணாவிரதத்திற்கு மதிப்புக் கொடுத்தது பிரித்தானிய அரசும் அந் நாளின் இந்திய மக்களுமே.
அதன் பின் வந்த இந்திய அரசுகளோ எந்த ஒரு அகிம்சைப் போராட்டத்தையும் மதித்ததாக வரலாறு இல்லை. அகிம்சை என்பது இந்தியாவிற்கு ஒவ்வாமை. அதை விடுங்கள்.
வன்காது மட்டுமல்ல்ல வன்மூளியும் தான். சொல்வது ஒன்று செய்வது ஒன்று.
திருமா உண்ணாவிரதத்தைக் கை விட்டது தான் நல்லது.