Tuesday, February 03, 2009

கலைஞரே காணும்


கலைஞரே காணும்


பொறுத்தது போதும்
பொறுத்தது போதும்
பொங்கியெழு மறத்தமிழா

பொறுத்தம னோகரனை
நொருக்கச் சொன்ன மு.க.
நீர் பொங்குவதெப்போ
பொறுப்பதே உம் பிழைப்போ

பொறுத்துப் பொறுத்துப்
பூத்த கண்ணால்
பூஞ்சிப் பார்த்தும்
புரியவில்லை
மு.க. நிலை - தி.
மு.க. நிலை
வெறுத்துப் போனோம்
வெல வெலத்துப் போனோம்

மு.க., தி.மு.க.
இன்று தமிழீழம்
நாளை தமிழகம்
என்று நிரல்
நீளும் போது
எங்கு போவீர்
என்ன செய்வீர்

மு.க. முழங்காத தமிழா
நாக்கால் வழங்காத பொருளா
கைப்புண்ணுக்குக் கண்ணாடியா
கலைஞருக்கே ஏடெழுதவா

காணும் ஐயா
ஓடலும் சாதலும்
காணும் ஐயா
தமிழன் மாய்தலை
காரும் ஐயா - உம்
பலம் கொண்டு
சேரும் ஐயா
பெருஞ் சிறப்புமக்கு

உம் கதவை நாமும்
உம் காதை ஊரும்
இன்னொரு முறை தேடாது
உம் புகழும் பெயரும்
உருக்குலைய முன்னே
உன்னி எழுந்து விடும்
உத்வேகம் பெற்று விடும்

உம்மால் முடியா விட்டால்
ஒதுங்கி வழி விடும் - உம்
இளைய தலைமுறையை
உசுப்பி அனுப்பிடும்

முன்னால் நின்று கொண்டு
தானும் செய்யான்
தள்ளியும் நில்லான்
என்றெல்லாம் தூற்றமுன்

செய்பவனைச் செய்ய விடும்
வெந்த புண்ணை ஆற விடும்

============================
காணும் = கண்டு கொள்ளும்
காணும் = போதும்
============================

பின்னூட்டச் செருகல்:

உம் மக்களுக்கு மந்திரி
பதவியில்லையா 'எந்திரி'

ஈழ மக்களுக்கு எவ்வொரு
நாதியில்லையா தந்திரி

நீ தந்தியடி தபாலடி
தமிழுலகம் தயாரடி

7 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Jeyapalan said...

அன்பழகன்,
உங்கள் கோபம் உணர்ச்சி மயமாக உள்ளது. அவன் இவன் போன்ற பதங்களைத தவிருங்கள்.
கொளுத்துவது என்பதெல்லாம் சரியல்ல. உங்கள் பின்னூட்டத்தை நீக்கி விடுகிறேன்.
அன்புடன்,
செயபால்

சவுக்கடி said...

*** முன்னால் நின்று கொண்டு
தானும் செய்யான்
தள்ளியும் நில்லான் ***

தந்திரமாய்த் தடுத்துக் கொண்டு மிருப்பான்!

Jeyapalan said...

savuccu (சவுக்கு, சரியா?),
சரியாகச் சொன்னீர்கள்.

தந்திரமாய்த் தடுத்துக் கொண்டு மிருப்பான்!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்(2009 மே):

தன் மக்களுக்கு மந்திரிப்
பதவியில்லை எந்திரி

ஈழ மக்கள் துயர்
துடைப்பதற்கோ தந்தியடி

தபாலடி தந்தியடி உன்போல் கண்டதில்லைத் தலையிடி

Anonymous said...

இன்று சற்று நேரம் உங்கள் பதிவை மேய நேரம் அமைந்தது. மேலோட்டமாகத்தான் பார்த்தேன். உங்களின் மன ஆறுதல்களின் வடிகாலகத்ான் எனக்குத் தோன்றுகிறது. தப்பாக எண்ண வேண்டாம் இன்று தான் நீங்கள் இலங்கை கனடா போன்ற விபரங்களை கண்டேன். காரணம் என் பதிவில் உள்ளே வந்த நட்பினால். நீங்களாவது என்னை திருப்தி படுத்துங்கள்?


பா. ராகவன் பிரபாகரன் படித்து விட்டீர்களா? நக்கீரன் வீரம் விளைந்த ஈழம் பாதர் ஜெகத் படித்துக்கொண்டுருக்கிறிர்களா? பாதர் என்ன பிறந்தது இலங்கையிலா? என்ன ஒரு தௌிவான விஷயங்கள் மற்றும் கவனிப்பு. நீங்கள் களத்தில் பங்கு எடுத்தவராக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம்?


ஆனால் வாழ்நாள் முழுமை அடைவதற்குள் நான் மூலை முடுக்கெல்லாம் சுற்றிய சிங்கப்பூர் மலேசியா மாதிரி இலங்கையை அதன் அத்தனை பகுதிகளையும் சுற்ற வேண்டும். அதற்குள் அத்தனை பிரச்சனைகளும் முடியவேண்டும். ஆளும் அதிகார வர்க்கம் அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று எப்போதும் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கும் உணர்வு உங்களுக்குப் புரிகிறதா?


நான் இன்னமும் இலங்கை குறித்து, அதன் உள்ளே நடக்கும் விஷயங்கள் குறித்து முழுமையான நிலைக்குப்போக முடியாமல் தவித்துக்கொண்டே இருக்கிறோன். மலையக மக்கள், யாழ்பாண மக்கள், வவுனியா காடு, கொழும்பு அமைப்பு, விற்கும் எரிபொருள் மற்றும் அரிசியின் அபரிமிதமான விலை என்று அது வரும் பாதை போகும் பாதை, சென்றடையும் பாதை, உண்மையிலேயே சராசரி சிங்கள குடிமகனின் மனோ நிலை என்ன? அவர்கள் பார்வையில் தமிழர்கள் எப்படித் தெரிகிறார்கள்? தமிழகத்தைப் போல் தூண்டுபவர்களுக்கும் துண்டாடுபவர்களுக்கும் இடையிலேயே வருத்தம் தோய்ந்து வாழ்ந்து கொண்டு இரு இனங்கள் குறித்த உண்மையான நிலவரங்கள் இது போன்ற பதிவுகள்,


பூகோள வரலாற்றின் உண்மையான நல்ல நடையில் எழுதுவீர்களா? திரு மா வாழ்க. திமுக கலைஞர் திட்டு கவிதை இதையெல்லாம் யாரோ ஒருவர் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மாறிக்கொண்டும் எழுதிக்கொண்டு தானே இருக்கிறார்கள். இல்லை என்றால் எனக்கு அது குறித்த பதிவுகளை அறிமுக படுத்துங்கள். என்னுடைய சேமித்து வைத்துள்ள விருப்ப செய்தி தளங்களில் இலங்கை சார்ந்தது தான் அதிகம்.


பாலகுமாரன் தஞ்சாவூருக்கும் அவருக்கும் முன் ஜென்ம தொடர்பு உண்டு என்று சொல்வது போது போல் எனக்கு இலங்கை, இலங்கை வாழ் தமிழர்கள், அவர்களின் உண்மையான தமிழ்பேச்சு, அந்த வழக்கில் வரும் சந்தோஷ வார்த்தைகள் இதற்கு மேலாக எந்தக்கொம்பானாலும் மறுக்கவே முடியாத மாவீரன் குறித்த பெருமிதமும்,


வழிகாட்டுங்கள் நண்பரே, பகிர்ந்துகொள்ளுங்கள். என் பதிவு வீட்டுக்கு தினமும் வாருங்கள். வருவேன் ஒரு நாள் உங்கள் நாட்டுக்கு?

http://texlords.wordpress.com

Jeyapalan said...

உங்கள் திறந்த கருத்துகளுக்கு மிக நன்றி. என் வலைத்தளமும் எழுத்துகளும் அதிகளவில் உணர்வுகளின் வடிகாலே. ஒருமுறை கலைஞரைச் சாடுவேன் மறுமுறை அவரைப் போற்றுவேன் ஏனென்றால் எனக்கு அவர் மேலோ வேறு யார் மேலுமோ தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லையே. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.