என்ன தான் காரணம்
என்ன தான் காரணம்
எம் காலை வாரிவிட
என்ன தான் காரணம்
தமிழக அரசுக்கு
என்ன தான் காரணம்
தமிழனைத் தவிக்க விட
என்ன தான் காரணம்
ஈழ மாந்தர் இன்னுயிரை
இனவரக்கன் குடித்த போது
அழியு முயி ரதை விடவும்
ஆட்சியு மரச கட்டிலும்
உறவுஞ் சொகுசுமே
காத்திடப் போராட
என்ன தான் காரணம்
எம் காலை வாரிவிட
என்ன தான் காரணம்
தன்னை நம்பி வந்தோரை
தவிக்க விட்டுத் தப்பாமல்
தன் மானந் தன் சபதம்
தனக்கென்ற கொள்கை
யெல்லாம் விட்டுவிட்டு
முன்னே வந்த தானைத்
தலைவனெங்கே - அவன்முன்னே
தரங்கெட்ட தலைகள் நீங்களெங்கே
பத்தோடு பதினொன்றாய்ப்
பத்தாம் பசலிகள்
பதுங்கி ஒழித்திருந்தால்
பாதகமேயில்லை ஐயா
பத்துத் தலையிருந்தால்
பத்துத் தண்டவாளத்தில்
பத்து ரயில் மறித்திடும்
பலங்கொண்ட நீயின்று
தவிக்க விட்டதேனையா
தனிக்க விட்டதேனையா
மனச் சாட்சி உறுத்தலையோ
மனதாரப் பொய் பேச
மண்ணுக்குட் போன பின்பும்
மாறாத வடு வந்து
மண்ணாண்ட உன்னையும்
உன்மக்கள் தன்னையும்
மதிப்புக் கெடுத்திடுமே
மானங் கெட்டிடுமே
காலை வாரிக்
கோலை ஓச்சக்
கேவலமாய் இல்லையா
காரணந்தான் என்னையா
Tuesday, November 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
என்னதான் காரணம் என்று இன்னுமா புரியவில்லை. மு.க அவர்கள் தமிழர் என்றாலே அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று முடிவெடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே! தம் குடும்பத்தாருக்கு பதவி ஏற்படுத்திக் கொடுக்கவே அவருக்கு நேரம் போதவில்லையே, ஈழத்தை கவனிக்க நேரம் ஏது?
சூடு சொரணை அத்தனையையும் இழந்துவிட்ட (மன்னிக்கவும்) தமிழர்களுக்குத்தான் என்ன கவலை? தான் உண்டு தன் சினிமா TV சீரியல் உண்டு, ஈழமக்கள் எப்படிப் போனால் என்ன என்பதுதானே அவர்கள் உள்ளக் கருத்து!
ஆண்டவன்தான் ஈழத்தவர்களைக் காப்பாற்றவேண்டும். இதுபோன்ற மானங்கெட்ட சுயநல தமிழக அரசியல்வாதிகளைவிட ராஜபக்ஸே எவ்வளவோ மேல் (மீண்டும் மன்னிக்கவும், ஆதங்கத்தில் எழுதிவிட்டேன்).
அன்புடன்
கி. விசுவநாதன்
உங்கள் கருத்துக்கு நன்றி. காரணம் தெரிந்தது தான், இருந்தாலும் ஒரு ஆற்றாமையின் கோப வெளிப்பாடே இது.
வரவுக்கு நன்றி.
தியா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் பக்கம் சென்றேன் நன்றாக இருக்கின்றன எல்ல்லாம்.
Visu Pakkam said...
என்னதான் காரணம் என்று இன்னுமா புரியவில்லை. மு.க அவர்கள் தமிழர் என்றாலே அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று முடிவெடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே! தம் குடும்பத்தாருக்கு பதவி ஏற்படுத்திக் கொடுக்கவே அவருக்கு நேரம் போதவில்லையே, ஈழத்தை கவனிக்க நேரம் ஏது?
சூடு சொரணை அத்தனையையும் இழந்துவிட்ட (மன்னிக்கவும்) தமிழர்களுக்குத்தான் என்ன கவலை? தான் உண்டு தன் சினிமா TV சீரியல் உண்டு, ஈழமக்கள் எப்படிப் போனால் என்ன என்பதுதானே அவர்கள் உள்ளக் கருத்து!
ஆண்டவன்தான் ஈழத்தவர்களைக் காப்பாற்றவேண்டும். இதுபோன்ற மானங்கெட்ட சுயநல தமிழக அரசியல்வாதிகளைவிட ராஜபக்ஸே எவ்வளவோ மேல் (மீண்டும் மன்னிக்கவும், ஆதங்கத்தில் எழுதிவிட்டேன்).
அன்புடன்
கி. விசுவநாதன்
5:35 AM, December 03, ௨௦௦௯
//
நீங்கள் இதை எப்படிச் சொன்னீர்கள் ?
//
சூடு சொரணை அத்தனையையும் இழந்துவிட்ட (மன்னிக்கவும்) தமிழர்களுக்குத்தான் என்ன கவலை? தான் உண்டு தன் சினிமா TV சீரியல் உண்டு, ஈழமக்கள் எப்படிப் போனால் என்ன என்பதுதானே அவர்கள் உள்ளக் கருத்து!
//
நானும் ஈழத்தவன் தான்.
ஆனால் நான் என் மண்ணுக்கு என்ன செய்தேன்?
அல்லது இனி என்ன செய்யலாம்
என்பதை விடுத்து
பிறரைக் குறை சொல்லி என்ன பயன்?
முத்துக்குமாரன் ஈழத்தில் பிறந்தானா?
அவன்போல் இன்னும் பல்லாயிரம் பேர் இருக்கினம்
ஒட்டுமொத்த தமிழகத் தமிழர்களையும் குறை சொல்வது முறையலவே.........
Post a Comment