Thursday, March 23, 2006

தமிழ்த் திரைப்படம் - கண்ணோட்டம்

அண்மைக் காலப் படங்களில் பலவற்றைக் குடும்பத்தவருடன் சேர்ந்து பார்க்க முடியவில்லையே. அதீத சண்டைக் காட்சிகள், அதில் அடிக்கும் அடிகள் மகா பயங்கரம். அவ்வளவு அடி வாங்கியும் மனிதன் உயிர் பிழைக்க முடியுமா என்ற புதுமைகள். வித்தை காரன் செய்ய வேண்டிய சாகசங்களை ஒரு கதா நாயகன் செய்கிறான். ஆயுதங்களுடன் வரும் பல பேரை பந்தாடுகிறான். விதந்துரைக்கப்பட்ட சம்பவங்கள். ஐயோ விட்டு விடுங்கள். பாடல், காதற் காட்சிகள் சகிக்க முடியவில்லை. இவ்வளவு இருந்தும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படங்களாகச் சில படங்கள் வரத்தான் செய்கின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

காதற் பாடற் காட்சி தவிர ரசித்துப் பார்க்கக் கூடிய படங்கள்:


1. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி: தங்கர்ப் பச்சான் படம், அருமை.
2. ஒரு நாள் ஒரு கனவு: பாசிலின் படம், அருமை. காற்றில் வரும் கீதமே பாடல் ஒன்றே போதும் படத்தின் அழகைச் சொல்ல. விருது பெற வேண்டிய பாடல்.
3. தவமாய்த் தவமிருந்து: சேரனின் இப் படத்தைப் பார்க்கத் தவமிருக்க வேண்டும்.
4. ஆட்டோகிராப்: சேரனின் படம். பாடல்கள் ஆகா, ஓகோ.
5. அழகி: தங்கர்ப் பச்சானின் படம்.
6. வேதம் புதிது
7. சலங்கை ஒலி
8. அந்தமான் காதலி

2 comments:

மாயவரத்தான் said...

//அண்மைக் காலப் படங்களில் பலவற்றைக் குடும்பத்தவருடன் சேர்ந்து பார்க்க முடியவில்லையே//

எனக்கு தெரிஞ்சு சுமார் 25 வருஷமா இதே டயலாக் தான் எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க. "இந்த வருஷம் மாதிரி ஒரு வெய்யில் எந்த வருஷமும் இருந்ததில்லப்பா"ன்ற மாதிரியான டயலாக்கோ இது?!

Jeyapalan said...

மாயவரத்தான்,
தவறுதலாக உங்கள் கருத்து ஒளிந்திருந்து விட்டது, மன்னிக்கவும். இப்பொழுது தான் கண்டேன்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

காலச் சக்கரம், வாழ்க்கைச் சக்கரம் என்பது இது தானோ?
அந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழ் சினிமா அப்படியே தான் இருக்கு, பெரிய மாற்றமில்லை.