ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் ரஜினிகாந்த் ஐயும் இணைத்து எழுதப் படும் ஒரு விடயம் அல்ல. சும்மா ஒரு சிந்தனையின் வரி வடிவம்.
சந்திரமுகி படத்தைப் பார்த்த போது அதில் ரஜினியின் பகுதியில் வேட்டையன் பாத்திரம் மற்றப் பாத்திரத்தை விட அள்ளிக் கொண்டு போவது தெளிவு. அதை பார்க்கும் போது யாருக்குமே தோன்றக் கூடிய ஒரு யோசனை, இது போல் ஒரு முழு நீள அரச கதையில் ரஜினி நடித்தால் மிக நல்லாக இருக்குமே என்பது தான். எனக்குத் தோன்றியது, உடனடியாகவே, இயக்குனர் சங்கர் இவரை வைத்து ஒரு அரச கதையை மிகப் பிரமாண்டமாக எடுத்தால் மிக நல்லாக இருக்கும் என்பது தான்.
நான் எதிர் பார்த்தது போலவே சிவாஜி படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. எதிர் பார்த்த அரச கதையாக இருக்குமோ இல்லையோ தெரியவில்லை. வேட்டையன் போல் ஒரு அரச கதையாக இருந்தால், வீர பாண்டிய கட்டப் பொம்மன் போல் ஒரு படத்தை ரஜினியும் தர முடியும். ரஜினியும் சிவாஜியும் தலைப்புச் சரியோ?
Tuesday, May 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ரஜினியின் தமிழ் உச்சரிப்பு?
சாம்
//ரஜினியின் தமிழ் உச்சரிப்பு? //
கேள்விக் குறி சரி தான். பேச்சைக் குறைக்கச் சங்கருக்குத் தெரியாதா என்ன?
ரஜினிதான் சிவாஜி;
சிவாஜிதான் ரஜினி!!
சிவாஜிராவ் தான் ரஜினிகாந்த்!
ஆனாலும், உங்க கற்பனை சூப்பர்!
இப்போதான், எங்கேயோ ஒரு பதிவுல படிச்சேன்,
கழக ஆட்சிக்காலத்துல, சரித்திர, வரலாற்றுப் படங்கள் அதிகம் வரவில்லையென்று!
திராவிட சரித்திரத்தைத் தாண்டி ஒன்றும் இருக்கக்கூடாது என்ற எண்ணமோ!
Post a Comment