ஜெயபால், 2006/07/03
Thursday, July 06, 2006
மரணம்
மரணம்
---------
மறையாதது மரணம்
நிலையானது மரணம்
மரிக்காதது மரணம்
மவுன நியதியே மரணம்
தோன்றிய யாவும்
தொடுமொரு நாளில்
நிலையான மரணத்தை
சரியான தருணத்தில்
பிறக்கும் போது
கூடவே பிறக்கும்
பிறழாக் கணக்கு
மரண வழக்கு
நுண்ணிய அங்கி முதல்
நூறுகோடி அண்டம் வரை
நுழைய வேண்டிய வாசலது
நுட்ப அதிசயம் சாதலது
மரணத்தின் வரவு
மர்மத்தில் மர்மம்
எப்ப வரும்
எப்படி வரும்
என்றே தெரியாத
தர்மத்தில் தர்மம்
ஆண்டவன் படைப்பான்
அவனே அழிப்பான்
அழிப்புக்குத் துணையாம்
மரணமெனும் மறையாம்
மரணத்தை வென்றோருமில்லை
மரணித்து மீண்டோருமில்லை - இம்
மர்மத்தை விளக்கவொரு
மார்க்கமும் இங்கில்லை
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//நுண்ணிய அங்கி முதல்
நூறுகோடி அண்டம் வரை
நுழைய வேண்டிய வாசலது
நுட்ப அதிசயம் சாதலது//
நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...
நன்றி சின்னக்குட்டி.
கவிதை நன்றாக இறுக்கின்றது. வாழ்த்துக்கள்.
வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி கலை அரசன் அவர்களே.
ஜெயபால்,
"பிறக்கும் போது
கூடவே பிறக்கும்
பிறழாக் கணக்கு
மரண வழக்கு"
அட நல்லா இருக்கே
அன்புடன்
கதிர்
பாராட்டுக்களுக்கு நன்றி கதிர்.
Post a Comment