உலகெங்கும் வாழும் தமிழர் இன்று இலங்கையில் நடைபெறும் அட்டூளியங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று உரிமைக் குரல் எழுப்புகிறார்கள். அந்தக் குரலை பல நாட்டுப் பாராளுமன்ற அங்கத்தவர்கள் கூடச் செவி மடுத்து ஆவன செய்வதாகக் கூறி ஒரு ஆறுதலை எங்களுக்குத் தருகிறார்கள்.
ஆனால் எங்கள் தந்தை மண்ணாம் தமிழ் நாடு ஏன் மெளனம் சாதிக்கிறது?
இரத்தம் துடிக்கவில்லையா ஈனப் படுகொலைகளைப் பார்த்த பின்னும்?
பெண்டுகளும், பிஞ்சுகளும், வயோதிபரும் கொல்லப் படுவது தெரியவில்லையா?
எங்கள் தமிழ்ச் சகோதரர்களே, மக்கள் சாவு அவ்வளவு இயல்பானதாகி விட்டதா?
தமிழகமே, இன்று எழாவிடில் என்று எழுவீர்கள்?
சாத்வீக முறையில் உங்கள் உணர்ச்சிகளைக் காட்டக் கூட உங்களுக்கு உரிமையில்லையா?
உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் தடையா?
எனக்குத் தெரியும் தமிழக மக்களின் உணர்ச்சிகள் கொதிப்பது.
ஆனால் என்ன பயம்? உங்கள் உணர்வை உறைய விடாதீர்கள்.
எங்களை உயிருடனே உறைய வைப்பதைப் பார்த்து வாளாவிராதீர்கள்.
Monday, May 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//ஆனால் எங்கள் தந்தை மண்ணாம் தமிழ் நாடு ஏன் மெளனம் சாதிக்கிறது?
//
கிளிச்சாங்க! எல்லாம் சூடு சொரனையற்று கிடைக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை பங்கு போட்டுக்கரதுன்னா வருவானுங்க. ஆரி கெட்ட முண்டங்க.
இப்பிடித் திட்டுறீங்களே :-). தேர்தல் தோல்வியைத் தாங்காது 80 தற்கொலைகள் இதுவரை நடந்ததாமே? சூடு சொரணை இல்லாமலா? எல்லாம் தலைவனைப் பார்த்துக் கிடக்கு, ம்ம்ம்ம்.
பின்னூட்டலுக்கு நன்றி
Sir,
I think they (general public of TN) are, at the moment, fretting over how 'free tv' will be distributed. When something that important is there to think about, how can they care about(spare time to think about) something like Urimaikkural?
As far as TN people are concerned, they will only get upset about injustice when their hero gets beat by villains.
-Kajan
கஜன்,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஆனாலும் ஒன்று. நாம் தமிழ் நாட்டு மக்களைப் பொதுப்படையாக ஒட்டு மொத்தமாகக் குற்றம் கூறக்க் கூடாது. அங்கே பாசமிக்க உறவுகள் ஏராளம் இருக்கிறார்கள். அரசியல் சிக்கல், அடாவடிச் சட்டங்கள் பயப்பட வைக்கின்றன. நல்ல தலைவன் வழி காட்டும் போது அவர்களின் அன்பு வெளிப்படும்.
அது விரைவில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.
ஏற்கனவே வட இந்தியர்கள் நம்மை ஏதோ தேச துரோகிகளாட்டம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் (இராஜீவ் கொலைக்குப் பிறகு).
//தேர்தல் தோல்வியைத் தாங்காது 80 தற்கொலைகள் இதுவரை நடந்ததாமே? //
தடுக்கி விழுந்த இறந்தவர்களையெல்லாம் இதில் சேர்த்துவிடுவார்கள். கூடிய சீக்கிரம் சென்சுரி அடிக்கப் போறோம் இல்ல. (நான படித்தவரை 99).
//அரசியல் சிக்கல், அடாவடிச் சட்டங்கள் பயப்பட வைக்கின்றன.//
அது தான் உண்மை. எல்லாம் இராஜீவ் படுகொலையால் விளைந்தது.
Post a Comment