ஆம் நம்மால் முடியும்
வரலாறு படைத்தது அமெரிக்கா
அந்நாட்டை ஆளவந்தார் பராக் ஒபாமா
பலநூறு சாதனைகள் படைத்ததில் இதுவொன்றும்
பத்தோடு பதினொன்றே அல்ல அல்ல
புரையோடிப் போயிருந்த நிறவெறிப்
புண்ணைக் கூடத் தூர எறிந்து விட்டு
மனித நேயம் மிக்கவரும் வாழும்
அமெரிக்கா நாமேயென்று
கொட்டி முழங்குது சங்கு
எட்டி ஒலிக்குது முரசு
ஆம் நம்மால் முடியும் - ஆம்
அமெரிக்காவில் இதுவும் முடியும்
இதுவே இலங்கை
இந்தியா வானால்
நினைக்கவே பதறுது
பாழ்பட்ட நெஞ்சம்
சாதி, சமயம்
இனம், மொழி
கோத்திரம், காத்திரம்
தாங்காத நாத்தமெல்லம்
பார்த்தபின் முடியுமா நம்மால்
மாறுமா நம் சிந்தை
தேறுமா நம் நாடு
நம்மாலும் முடியும்
மனித நேயம் புரிந்து விட்டால்
நம்மாலும் முடியும் – ஆனால்
புரியுமா மனித நேயம்?
Wednesday, November 05, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை நண்பரே, உங்கள் கவிதை.
இந்த தேர்தல் மூலம் அமெரிக்கர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், இதயமுள்ளவர்கள் என்பதை உலகுக்கு நிரூபித்துவிட்டனர்.
ஒரு சில கம்யூனிச வெறி பிடித்த தமிழ் நண்பர்கள் இதன் அருமையை கூட கண்டுகொள்ள தெரியாமல் எப்போதும்போல் சதா அமெரிக்கா மீது தங்களது குப்பைகளை வீசி நாற்றமடிக்க முயற்சிக்கிறார்கள். மனம் தாங்கவில்லை.
வாழ்க அமெரிக்கா
வாழ்க அமெரிக்க மக்கள்
LONG LIVE AMERICA!
I LOVE AMERICA!
WELL DONE AMERICANS!
வரவுக்கும் பாராட்டுக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி மாசிலா.
நான் எல்லா அமெரிக்கரும் சிறந்தவர்கள் என்று கூறவில்லை.
// மனித நேயம் மிக்கவரும் வாழும் //
மனித நேயம் மிக்கவர்களும் அங்கே உண்டு என்று சொல்கிறேன்.
அவர்களின் இது நாள் வரையிலான சட்டாம்பிள்ளைத் தனம் யாருக்கும் பிடிக்காது தானே. இனிமேல் எப்படியென்று பார்ப்போம்.
அன்புடன்,
செயபால்
Post a Comment