மே 18, 2009 இன் பேரிடி:
பேரிடி தான் வீழ்ந்ததோ
பெருந் துன்பஞ் சூழ்ந்ததோ
சூதர்கள் சூழ்ச்சிகளால்
சுய வுரிமை செத்ததோ
எலி வீடே யானாலும்
தனி வீடே யாமென்னும்
தமிழீழ மண் ணிங்கே
குருதியிலே முழுகியதோ
தன்னிறைமை தன்னையின்று
மனித நேயம் பேசிக் கொண்டு
மனித நேயம் சாகடித்த
மனித ரல்லா நாடரங்கில்
மனித மேமாண் டதின்று
பாண்டவர் படாத பாடா
யூதர்கள் படாத கேடா
காதகர்கள் காரியங்கள்
கவிழ்ந்து விழுங் காலம் வரும்
மாண்ட தொகை மாந்தருயிர்
மீண்டும் எழுந்தே யுயர்
மானமிகு மண்ணில் வர
மாதவம் நாம் செய்திடுவோம்
மறவர்களைச் செதிக்கிடுவோம்
Monday, May 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான கவிதை. நல்லபதிவு. வாழ்த்துக்கள்.
உங்கள் பாராட்டுகளுக்கும் வரவுக்கும் நன்றி.
செயபால்
Post a Comment