Monday, February 09, 2026

பட விமர்சனம் - வித் லவ்

 பட விமர்சனம் - வித் லவ் (With Love)


அண்மையில் பார்க்க நேர்ந்த படம் இது. மொத்தத்தில் பரவாயில்லை (40%) ஆனாலும் சில விமர்சனங்கள்.

பழைய காதல்களில் சொல்லாமல் போய்விட்ட காதல்களை மட்டும் மீட்டுப் பார்க்கும் கதை. சொல்லிய காதல்களும் முறிந்த காதல்களும் மீட்டுப் பார்க்கப்படவில்லை.

பழைய காதலர்களைச்  சந்திக்கும் நிலைமைகளைத்  திருட்டுத்தனமாக அல்லது தந்திரமாக ஒரு பாதுகாப்பு வலயத்தில் உருவாக்கி உள்ளார்கள். அவர்களின் அடுத்த பக்க நபர்களுக்கும் தெரிந்து சந்திப்புகள் இருந்திருந்தால் நிலை வேறாக இருந்திருக்கும்.

நாயகிக்குக் குரல் கொடுத்திருப்பவர் மலையாளத் தொனியுடன் பேசியுள்ளார். நாயகி தமிழ் என்றும் சில காலம் பெங்களூரில் இருந்ததாகவும் மட்டும் சொல்லப்பட்டார். மலையாள வாடைக்கு வேறு காரணங்கள் இல்லை.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடி விழுமா?

படத்தின் பெயரை "சொல்லாமலே" என்று வைத்திருக்கலாம்.