கட்சி
காக்கும் பூதங்கள்
புதையல் காக்கும்
பூதங் கள்போல்
அரச கட்சிகள்
கட்டிக் காக்கும்
தலையாரிகள்
அவரிலிருந்து காப்பாற்ற
முடியா வேளை
முழைக்கும்
புதுசா
புதிய புதிய கட்சிகள்
பூதங் காத்த கட்சிகள்
புதையல் ஆகிப்
பின்னர் பாட்டன்
சொத்தென் றாகி
காலச்
சக்கரம்
சுழன்று
வரும்
புதிய கட்சிகள்
எப்படிப்
போகும்
முதலிலிருந்து
மீண்டுந் தொடங்கும்.
காலம்
முழுக்க
முதல் கல்லே
தாண்டா திருந்து
ஏமாறும் அறியா
மக்கள் நாமே
எத்தனை
கூட்டு
எத்தனை
பிரிவு
அத்தனையும்
அடிக்கடி பார்த்தும்
நம்பிக்கையுடன்
நம் மக்கள்
பாடப்
புத்தகம்
பல முறை எடுத்துப்
படிக்கத்
துவங்கி
முதல்
பக்கம்
மட்டும்
படித்த
மாணாக்கன்
போல
இன்றும் நாம்
No comments:
Post a Comment