ஆங்கிலத்திற்கு
ஒரு இட்டுக்கட்டு. (ஆங்கிலத்திற்கே? கொடுமை!)
தமிழர்கள் மத்தியில்,
ஆங்கிலத்தில் வார்த்தைகளை எழுத முடியாத அளவிற்கு ஆங்கில மொழிக்கு ஒரு குறை ஏற்பட்டுள்ளது.
அதனால் தமிழர்கள்
தமிழ் மொழியில் ஆங்கிலத்தை எழுதி ஆங்கில மொழிக்குக் கை கொடுத்து வருகிறார்கள்.
பத்திரிகைகள்,
சஞ்சிகைகள் என எங்கும் இந்தக் கொடை கண்கூடாகத்
தெரிகிறது.
ஆங்கில வார்த்தைகளை
இலகுவாக எழுத இப்பொழுது தமிழ் அரிச்சுவடி உதவுகிறது.
ஒரு சிறு உதாரணம்:
டபுள் ஹீரோயின்ஸுடன் டூயட்
முன்னொரு காலத்தில்,
சமசுக்கிருதத்திற்கும் கொடை வழங்கியது நம் தமிழே.
கொடையிலும் தமிழ்
தான் முதலிடம்.
வாழ்க கொடுக்கும்
தமிழர்கள்.
No comments:
Post a Comment