அசுரர்கள் என்று
சொல்லப்படுபவர்களைத் தமிழரின் முப்பாட்டன், பூட்டன்
என்று சிலர் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?
எடுத்துக்காட்டாக நாம் தெரிந்து
வைத்திருக்கும் இரண்டு அசுரர்களைப் பார்ப்போம்.
இரணியன்: பிரகலாதனின்
தந்தை. பிரகலாதன் அசுரன் இல்லை ஆனால் அவன் தந்தை அசுரன்.
கம்சன்: கண்ணனின்
மாமன்.
இப்படியாக ஒன்றுக்குள்
ஒன்றாக இருந்தவர்களைடையே அசுரரும் தேவரும் இருந்திருக்கிறார்கள். நல்லவரும் கெட்டவரும்
அவர்களிடையே இருந்தார்கள். சண்டை போட்டார்கள் செத்தார்கள். கெட்டவர்கள் அழிந்தார்கள்,
அவர்கள் உறவினரே அசுரரை அழித்தார்கள்.
இப்படி இருக்கும்
போது அசுரர்களாகக் காட்டப்படுபவர்கள் தமிழருக்கு எப்படி உறவாகலாம்? அப்படி உறவானால்,
கண்ணனும் மற்றையோரும் நம் உறவே?
இப்பொழுதும் எம்மிடையே
காட்டிக் கொடுப்போரும், துரோகம் செய்வோரும் இருக்கிறார்கள் தானே? இவர்களைப் பிற்காலச்
சந்ததிகள் தமிழர் என்று பாசத்துடன் உரிமை கோர வேண்டுமா?
ஆக மொத்தத்தில் அசுரர்களும் அவரை அழித்த மற்றவர்களும் நமக்கு உறவுமல்ல உரித்துமல்ல.
அசுரரை உறவென்று
கொள்ளோம். அவர்களை விட்டு விலகி இருப்போம்.
No comments:
Post a Comment