சொல்வதிலகு செய்வதிலகல்ல
என்ற
கருத்தைச் செய்து
காட்டும் உன்மத்தர்
இங்கு இருந்தென்ன
போயென்ன
ஊருக்குபதேசித்
துள்வீட்டைப் பூட்டிவைக்கும்
உப்பற்ற உபதேசிகள்
இங்கு உயிர்
வாழ்ந்தென்ன வீழ்ந்தென்ன
வாழு வாழவிடு செய்யிலை
செத்திடெனும்
போலி வார்த்தை
பேசும் பதர்கள்
பல்பிடுங்கீரோ
நாப்பிடுங்காரோ
சும்மாயிரது போதும்
என்றுணர்ந்த மாந்தர்
எம்மாம் பெரிதாய்ப்
போதிப்பார் இவர்
வாழ வாழ்த்தும்
உபதேசமே
செயபால், ஆக. 10, 2012
1 comment:
அருமையான கருத்தை
இன்றைய நிலையில் அவசியான கருத்தைச் சொல்லிப்போகும்
கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment